• Jan 19 2025

சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த பேரதிர்ச்சி தகவல்! அயலான் ரிலீஸுக்கு நீதிமன்றம் தடை?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர். ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள் தோல்வி அடைந்தாலும் அதற்பிறகு இவர் நடித்த படங்கள் வசூல் ரீதியில் வெற்றி தான் அடைந்தது. 

தனது நடிப்பாலும், நகைச்சுவையாழும், நடனத்தினாலும் பல ரசிகர்களை தன்வசம் கவர்ந்து வைத்துள்ளார். தனது படத்தை தாண்டி வளர்ந்து வரும் கலைஞர்களுக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். அண்மையில் நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் வெளிவந்த ஜோ திரைப்படத்தை பார்த்து படக்குழுவினரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். 


மேலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த பொங்கல் விருந்தாக அயலான் படம் திரைக்கு வரவுள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அயலான் படத்தை தயாரித்த 24 AM ஸ்டுடியோஸ் நிறுவனம் டி.எஸ்.ஆர் பிலிம்ஸ் என்ற நிறுவனத்திடம் வாங்கிய 10 கோடி ருபாய் கடனை KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்டது.

அதில் 3 கோடியை செலுத்திய நிலையில் மீதம் இருக்கும் தொகையை தரவில்லை என டி.எஸ்.ஆர் பிலிம்ஸ் வழக்கு தொடர்ந்து இருக்கிறது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் அயலான் படத்தை 4 வாரங்கள் ரிலீஸ் செய்ய தடை விதித்து இருக்கிறது. 

இதன் காரணமாக அயலான் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுமா என்பது கேள்விக்குறி ஆகி இருக்கிறது.  

Advertisement

Advertisement