• Jan 19 2025

பாக்கியாவுக்கு வார்னிங் கொடுத்த கணேஷ்! தலைகீழான செழியனின் வாழ்க்கை! ஜெனி எடுத்த முடிவு?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய நாள் என்ன நடக்கவுள்ளது என்பதற்கான எபிசோட் வெளியாகியுள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதன்படி, பாக்கியாவின் பொருட்காட்சிக்கு கணேஷ் வர அதிர்ச்சியடைகிறார் பாக்கியா. வாசலில் இருந்து டிக்கெட் போட்டுக் கொண்டிருந்த அமிர்தாவை உள்ளே போக சொல்லிவிட்டு கணேஷிடம் போய் கதைத்து சமாளிக்கிறார்.

இதன்போது, நீங்க உங்க வேலைய தான் பாத்துட்டு இருக்கீங்க? இன்னும் எத்தின நாளைக்கு அமிர்தவ ஒழிச்சு வச்சிட்டு இருக்க போறீங்க? சொன்ன நாளைக்குள்ள ஏதாவது பண்ணுங்க இல்ல நான் ஏதும் பண்ணிடுவன் என சொல்லிச் செல்கிறார் கணேஷ்.


இதை தொடர்ந்து, ஜெனியின் அப்பாவுக்காக செழியன்  காத்துக் கொண்டிருக்க, மாலினி அங்கு வருகிறார். அதுக்கு ஏன் இங்க வந்த என்று கேக்க, உன்ன பாக்க தான் வந்தன் என சொல்ல, மாலினி எல்லாத்துக்கும் சாரி என சொல்லுகிறார். அந்த நேரத்தில் ஜெனியின் அப்பாவும் வர, செழியன் அதிர்ச்சி அடைகிறார். மாலினி அவரிடம், செழியனுக்கு ஜெனியும் வேணும் நானும் வேணும் என இல்லாதவற்றை சொல்லுகிறார்.


இதையடுத்து, கோவப்பட்ட ஜெனியின் அப்பாவிடம் நான் நடந்தவற்றை சொல்லுகிறேன் ப்ளீஸ் அங்கிள் என கெஞ்ச, நீ அழுதது எல்லாம் நடிப்பு தானா? இனி என்ன செய்றன் பாரு என சொல்லி கிளம்புகிறார். வீட்டிற்கு சென்ற செழியன் பாக்கியாவை கட்டிப்பிடித்து நடந்தவற்றை சொல்லி அழுகிறார். அவருக்கு பாக்கியா ஆறுதல் சொல்லுகிறார்.


வீட்டிற்கு சென்ற ஜெனியின் அப்பாவும் நடந்தவற்றை சொல்லி கத்துகிறார். என்ன நடந்தது என கேக்க, ஜெனியின் அம்மா, ஜெனியிடம் எல்லாவற்றையும் சொல்லி, இனி உனக்கு அவன் வேணாம், அவன தூக்கி எரிஞ்சிடு என சொல்லுகிறார். இது தான் இன்றைய எபிசோட்.



Advertisement

Advertisement