• Feb 22 2025

வடக்குப்பட்டி ராமசாமி பாக்ஸ் ஆபிஸ் வசூல்; 4 நாட்களில் இத்தனை கோடிகளா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் நடிகர் சந்தானத்தின் நடிப்பில் வெளியாகி, தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் வடக்குப்பட்டி ராமசாமி.

டிக்கிலோனா படத்தை தொடர்ந்து இந்த படத்துக்கும் கவுண்டமணியின் காமெடியை ஞாபகப்படுத்தும் விதமாக, குறிப்பாக வடக்குப்பட்டி ராமசாமி  என்ற வார்த்தையை தலைப்பாக வைத்தே இந்த படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர்.

இதில் சந்தானத்துக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் நிழல்கள் ரவி, எம்.எஸ்.பாஸ்கர், மாறன், தமிழ், ஜான் விஜய், ரவி மரியா, கூல் சுரேஷ், பிரசாந்த், சேசு, மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.


ஓரளவு சுமாரான வரவேற்பை பெற்று வரும் வடக்குப்பட்டி ராமசாமி முதல் நாள் உலகளவில் ரூ. 1.5 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்தது.

இந்த நிலையில், கடந்த 4 நாட்களில் இப்படம் வசூலித்த பணம் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, இந்த படம் கடந்த நான்கு நாட்களில் ரூ.7.96 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Advertisement

Advertisement