• Apr 07 2026

ஜோவிகா ஒரு கேடி வேல பண்ணா...! மகள் பற்றிய உண்மையை உடைத்த வனிதா? இது தெரியாம போச்சே!

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகையாகவும் பிக் பாஸ் பிரபலமாகவும் காணப்படுபவர் தான் வனிதா விஜயகுமார்.

இவரின் மூத்த மகளான ஜோவிகா விஜயகுமார், கடந்த ஆண்டு இடம்பெற்ற பிக் பாஸ் சீசன் 7ல் பங்கு பற்றி இருந்தார்.

பிக் பாசில் பங்கு பற்றிய ஜோவிகாவுக்கு ஆரம்பத்தில் அவரது துடிப்பான பேச்சை பார்த்த ரசிகர்கள், ஜோவிகா ஆர்மி ஆரம்பித்து அவரைக் கொண்டாடி வந்தனர்.

எனினும் நாளடைவில் அவரது பேச்சு, திமிர் கதைகள் என்பவற்றால் ஜோவிகாவை வெறுத்த ரசிகர்கள் அவரை அன் லைக் செய்தனர்.


தற்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஜோவிகா, போட்டோ சூட், மாடலிங் செய்வதில் பிஸியாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது ஜோவிகா செய்த கேடி சம்பவம் ஒன்றை வனிதா பகிர்ந்துள்ளார்.


அதன்படி வனிதா கூறுகையில், பிக் பாஸ் வீட்டில் தீபாவளிக்கு கார்டு அனுப்பிய போது, ஹாப்பி தீபாவளி ஜோவிகா... மிஸ்ஸிங் யூ.. அப்படி போட்டு ஒரு ஹாட்டும் போட்டு இருந்தேன். மேலும் ஐ அம் செட்டிங்ஸ் ஸ்வீட்ஸ்.. ஆனா அது உன் பிரெண்ட்ஸ் கூடயும் பகிர்ந்து கொள்ளனும் என்று போட்டு இருந்தேன்.

ஆனா அதை கமல் சார் முன்னிலையில் படிக்கும் போது, ஒரு எக்ஸ்பிரஷன் கொடுத்துட்டு., அப்படியே அதை மழுப்பிட்டா. உன் பிரெண்ட்ஸ் கூடயும் பகிர்ந்து சாப்பிடணும் என்று சொன்னதை சொல்லாம அப்படியே தூக்கிட்டா... 

அதுக்கு பிறகு நான் சொல்லியும் அவ ஸ்வீட்டா சாப்பிட்டு இருந்தா...அது எனக்கு சந்தோஷம் இல்லை எனக் கூறியிருந்தார்.

Advertisement

Advertisement