பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, செழியன் பாக்கியாவப் பாத்து நீ இதுவரைக்கும் பிஸ்னஸ் செய்தது போதும் இனி கொஞ்சம் ரெஸ்ட் எடு என்று சொல்லுறார். மேலும் வீட்டிலேயே ஜாலியா இரு என்று சொல்லுறார். அதுக்கு பாக்கியா நான் வீட்ட இருந்தால் வீட்டுச் செலவ யார் பாக்கிறது என்று கேக்கிறார். அதைக் கேட்ட ஈஸ்வரி 7 வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் நீ வீட்டில தானே உட்கார்ந்திருந்த என்று சொல்லுறார்.
அதுக்கு பாக்கியா அப்ப இருந்த சூழ்நிலை வேற இப்ப இருக்கிற சூழ்நிலை வேற என்று சொல்லுறார். அதனை அடுத்து செழியன் தான் குடும்பத்த பாத்துக்கிறேன் என்று சொல்லுறார். அதைக் கேட்ட எழில் அதென்ன நீ மட்டும் பாத்துக்கிறது நானும் பாத்துப்பேன் என்று சொல்லுறார். அதைக் கேட்ட ஈஸ்வரி எங்கயாவது இப்படி ஒரு பிள்ளைகள் கிடைப்பாங்களா என்று கேக்கிறார்.
மறுநாள் பாக்கியா கிட்ட வந்து ரோட்டில போற எல்லாரும் எதுக்காக ரெஸ்டாரெண்ட வித்திங்க என்று கேக்கிறார்கள். பின் பாக்கியா செல்விக்கு போன் எடுத்து என்னோட வாறிய வெளியில போவம் என்று கேக்கிறார். அதைத் தொடர்ந்து ஈஸ்வரி வெளியில எங்க போற என்று கேக்கிறார்.
அதனை அடுத்து பாக்கியா செல்வியப் பாத்து ஒரு இடத்த வாடகைக்கு எடுத்து ரெஸ்டாரெண்ட் பண்ணலாம் என்று சொல்லுறார். அதைக் கேட்ட செல்வி உண்மையா தான் சொல்லுறியா என்று கேக்கிறார். இதனை அடுத்து ரெண்டு பேரும் கடை ஒன்றை வாடகைக்கு வாங்குறதுக்காக ஓனரோட கதைச்சுக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!