• Jan 19 2025

நிவேதா பெத்துராஜ் போட்ட போலீஸ் டிராமா இதுக்குதான்.. ‘பருவு’ டிரைலர் எப்படி இருக்கு?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை நிவேதா பெத்துராஜ் காவல்துறை அதிகாரி ஒருவரிடம் வாக்குவாதம் செய்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அதன் பின்னர் தான் அது அவர் நடித்து வரும் வெப் தொடர் ஒன்றுக்கான ட்ராமா என்பது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த வெப் தொடரின் விளம்பரத்தையும் நிவேதா பெத்துராஜ் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்து விரைவில் ஜி5 சேனலில் வெளியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நிவேதா பெத்துராஜ் நடித்த வெப் தொடர் ‘பருவு’ ட்ரெய்லர் தமிழ் தெலுங்கு மொழிகளில் வெளியாகி உள்ள நிலையில் இந்த ட்ரெய்லர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.



இந்த ட்ரெய்லரிலிருந்து ஜாதியை பார்க்காமல் காதல் திருமணம் செய்து கொள்ளும் நிவேதா பெத்துராஜுக்கு ஏற்படும் பிரச்சனைகள், அவரது கணவரை கொலை செய்ய தேடும் ஒரு கும்பல், அந்த கும்பலில் இருந்து கணவரை காப்பாற்ற போராடும் நிவேதா, ஆணவக் கொலை மற்றும் சாதி பிரச்சனையால் வெறி கொண்டிருக்கும் வில்லனிடம் இருந்து நிவேதா பெத்துராஜ் தனது கணவரை காப்பாற்றினாரா போன்ற காட்சிகள் உள்ளன.

இந்த வெப் தொடர் ஜூன் 14ஆம் தேதி முதல் ஜி5 சேனலில் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இந்த வெப் தொடரின் டிரைலருக்கு ரசிகர்கள் ஆதரவு குவிந்து வருகிறது. ஏற்கனவே சரியான திரைப்பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நிவேதா பெத்துராஜுக்கு இந்த வெப் தொடர் வெற்றி கொடுத்தால் அவர் தமிழ் தெலுங்கு திரை உலகில் அதிக வாய்ப்புகள் பெற பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Advertisement

Advertisement