• Jan 18 2025

ஆட்டோ டிரைவராக பிறந்திருக்கலாம்.. அனிகா சுரேந்திரனின் புகைப்படத்தை பார்த்து ஏங்கும் நெட்டிசன்கள்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சில படங்கள் நடித்த நிலையில் தற்போது நாயகியாக மாறி இருக்கும் அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

அஜித் நடித்த ’என்னை அறிந்தால்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். அதன் பிறகு ’நானும் ரவுடிதான்’ ’விஸ்வாசம்’ போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நிலையில் தற்போது அவர் நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் சமீபத்தில் வெளியான ’பிடி சார்’ திரைப்படத்தில் அனிகா சுரேந்திரன் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது தெரிந்ததே.

மேலும் ’வாசுவின் கர்ப்பிணிகள்’ ’ராயன்’ உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்து வருகிறார் என்பதும் இந்த இரண்டு படங்களும் விரைவில் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கும் அனிகாவுக்கு இரண்டரை மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் இருக்கிறார்கள் என்பதும் அதில் அவர் அவ்வப்போது கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் 19 வயதில் இவ்வளவு கிளாமர் தேவையா என்ற விமர்சனம் எழுந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் நகர் ஆட்டோவில் செல்லும் புகைப்படம், ஆட்டோவில் இருந்து இறங்கும் புகைப்படம் ,அதன் பின்னர் தெருவில் நடந்து செல்லும் புகைப்படத்தை அனிகா பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.
 
மேலும் ’ஆட்டோ டிரைவராக இருந்திருக்கலாம்’ என்றும் ’அனிகா சுரேந்திரன் இவ்வளவு நாள் நடித்தும் ஒரு கார் கூட வாங்கவில்லையா’ என்றும் கமெண்ட்கள் பதிவாகி வருகிறது. ஆனால் அதே நேரத்தில் ’நல்லவேளை ரோட்டில் செல்லும் போது கிளாமராக இல்லாமல் டீசன்டான உடையில் வந்திருக்கிறார்’ என்ற ஆறுதலும் நெட்டிசன்களுக்கு ஏற்பட்டுள்ளது.


Advertisement

Advertisement