• Jan 19 2025

இப்ப உங்களுக்கு குளுகுளுனு இருக்கா விஜயா? பதற்றத்தில் மீனா அம்மா ! முத்து செய்த காரியம்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், அண்ணாமலை தனது நண்பர்களை பார்த்து விட்டு வருவதாக வெளியூருக்கு கிளம்பி செல்கிறார். 

அதன்பின் மீனா டிபன் செய்ய கிச்சனுக்கு சென்றபோது அங்கு முத்துவின் நண்பர் ஒருவர் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக வருகிறார். ஆனாலும் அவருக்கு இல்லை அவரது அண்ணாவுக்கு திருமணம் என்று முத்துவுக்கு பத்திரிகை கொடுக்க, அவர் நீ கல்யாணத்தப்போ   மண்டபத்துல இருக்காத.. எங்கையாவது போயிரு, இல்லாட்டி உங்க அண்ணன் ஓடின பிறகு   அந்தப் பொண்ண உங்க தலைல கட்டி வச்சு.. உன்ட  வாழ்க்கையை கெடுத்துருவாங்க என்று மனோஜை குத்திக் காட்டி சொல்லுகிறார். இதைக் கேட்டு மீனா அதிர்ச்சியாக நிற்கிறார்.

முத்து அவரின் நண்பரை வெளியே விட சென்றபோது, விஜயா இது தான் அவன் மனசுல இருக்கு. ஏதோ பெரிய திருமண விழா எல்லாம் கொண்டாடினீங்களே அப்படி என்று வழமை போல மீனாவுக்கு குத்தி காட்டுகிறார்.


இதை தொடர்ந்து முத்து சாப்பாடு ரெடியா என்று கேட்க, தோசைக்குமா இல்ல அதனால செய்யல என்று சொல்லுகிறார். அப்ப உப்புமா என்று கேட்க, அதுக்கும் ரவை இல்லை என்று சொல்லி ஒரு மாதிரி கதைக்கிறார். இதனால் என்ன ஆச்சு என்று முத்து கேட்டுக் கொண்டிருக்க அந்த நேரத்தில் ரோகிணி மனோஜ் வந்து சாப்பாடு ரெடியா என்று கேட்கின்றார்கள்.

அதற்கு நான் டிபன் செய்யல என்று சொல்லுகிறார் மீனா. இதன்போது நேரத்துக்கு சொன்னா நாங்க வெளியே சாப்பிட்டு இருப்போம் தானே என்று மீனா சொல்ல, நீங்க தானே ஏ பி சி  ஜூஸ் எல்லாம் போட்டு குடிப்பீங்க.. பிரிட்ஜ்ல சாமான் இருக்குது செய்து சாப்பிடுங்க அப்படி இல்லாட்டி ஹோட்டல்ல சாப்பிடுங்க என பதிலடி கொடுக்கிறார். விஜயாவுக்கும் பதிலுக்கு பதில் கொடுக்கிறார் மீனா.

அதன் பிறகு முத்து என்னாச்சு என்று கேட்க, இதுதான் உங்க மனசுல இருந்துச்சா நான் உங்களுக்கு தலையிடியா போயிட்டேனா? அப்படி என்று மீனா கேட்க, அது சும்மா சொன்னது என்று சமாளிக்கிறார் முத்து. ஆனாலும் மனசுல இருந்தது தான் வெளியில வரும் என்று மீனா கோபத்தின் உச்சியில் இருக்கிறார்.

இதைத்தொடர்ந்து மீனாவின் அம்மா மீனாவுக்கு போன் பண்ணி பேச, மீனா ஒழுங்கா பேசாமல் பிறகு பேசுகிறேன் என போனை வைக்கிறார். இதனால் மீனாவின் அம்மா பதற்றமாக, சத்யா  வழமை போல முத்து தான் எதுவும் செய்திருப்பான், சண்டை போட்டு இருப்பான் என்று சொல்லுகிறார். ஆனால் அக்கா கொஞ்ச நேரத்துல கால் பண்ணுவா என சொல்லி மீனாவின் அம்மாவை சமாளிக்கின்றார் சீதா. இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement