• Jan 20 2025

அடுத்தது நான் தானே.. ஈஸ்வரி சொன்ன வார்த்தை? செழியன் தலையில் விழுந்த பேரிடி

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், புது வீட்டிற்கு வந்த எழிலும் அமிர்தாவும் பால் காய்ச்சுவதற்கு தயாராகிக் கொண்டிருக்க, அமிர்தாவின் அம்மா தேவையான சாமான்களை வாங்கி வருமாறு சொல்லிக் கொண்டிருக்கின்றார். அந்த நேரத்தில் பாக்கியாவும் செல்வியும் சாமான்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வருகின்றார்கள்.

இதைப் பார்த்த எழில் மிகவும் சந்தோஷப்படுகின்றார். அதன் பின்பு எழில் வெளியே போக, அமிர்தாவின் அம்மா தனக்கு உங்கள் மீது வருத்தம் இருப்பதாக சொல்ல, பாக்கியா எழிலும் அமிர்தாவும் இப்போதைக்கு தனியாக இருப்பது தான் நல்லம். ஒருநாள் எழிலிலால் நிச்சயம் சாதிக்க முடியும் என்று மிகவும் வருத்தமாக  பேச, இதனை வெளியில் நின்று எழில் கேட்டு வருத்தப்படுகின்றார்.

மறுபக்கம் செழியன் டென்ஷனாக போனில் பேசிக்கொண்டு இருக்க, அங்கு ஜெனி வந்ததும் போனை வைத்து விடுகின்றார். ஆனால் இதை அவதானித்து விட்டு என்ன விஷயம் என்று கேட்க ஆபிஸில் பிரச்சனை சில நேரம் எனது வேலை பறி போய்விடலாம் என்ற வகையில் அவர் சொல்லுகின்றார். ஆனாலும் அப்படி எல்லாம் நடக்காது உனக்கு வேலை போகாது என்று செழியனுக்கு  நம்பிக்கை கொடுக்கின்றார் ஜெனி.


இதை தொடர்ந்து ஈஸ்வரியும் இனியாவும் கிச்சனில் இருக்க, பாக்கியா வந்ததும் எழிலின் வீட்டை பற்றி விசாரிக்கின்றார் ஈஸ்வரி.. மேலும் அவனிடம் காசு இருக்கிறதா? வீடு நல்ல வீடா? என்ற விசாரிக்கின்றார். 

மேலும் இந்த வீட்டில் இருந்து ஒவ்வொருவராக வெளியே  போகின்றார்கள். இப்ப மாமா போயிட்டார். அடுத்தது நான் தானே என வருத்தப்படுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement