• Dec 18 2024

திடீரென சத்யா, விஜயாவுக்கு வந்த நல்ல புத்தி..! ரோகிணி போட்ட மாஸ்டர் பிளான்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மீனாவை நினைத்து அவரது அம்மா அழுது கொண்டிருக்க அந்த நேரத்தில் சத்யா வந்து என்ன நடந்தது என கேட்கின்றார். அதற்கு எல்லாம் உன்னால தான் என அவருக்கு அடித்துவிட்டு நடந்ததை சொல்லுகின்றார். இதனால் கோபப்பட்ட சத்யா நேராக சிட்டியை பார்க்க செல்கின்றார்.

அங்கு சென்றதும் முத்து அடித்ததாக சிட்டியின் ஆட்கள் சொல்ல, அடித்ததோடு நிப்பாட்டிட்டாரே என்று சந்தோஷப்படுங்கள் என்று சொல்லுகின்றார். மேலும் அக்கா வந்து சண்டை போட்டால் நீ அதை என்கிட்ட தான் சொல்லி இருக்கணும். எதற்கு அக்கா மேல கைய வைத்தாய் என கோவப்படுகின்றார். 

மேலும் அக்காவிடம் மன்னிப்பு கேட்குமாறு சிட்டி சொல்ல, தன்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்று சொல்லுகின்றார். இதனால் இனி உனக்கும் எனக்கும் எந்த பிரண்ட்ஷிப்பும் இல்லை என சத்யா சொல்லிவிட்டு செல்கின்றார்.


இதைத்தொடர்ந்து எல்லோரும் ஹாஸ்பிடலுக்கு செல்ல அங்கு சத்யாவும் செல்லுகின்றார். முத்து மருந்து வாங்க சென்றதும், சத்யா மனமுருகி நான் இனி அவன்கூட சேர மாட்டேன் சண்டை போட்டு வந்துட்டேன் நீ தான் முக்கியம் என சொல்லுகின்றார். இதனால் மீனா சந்தோஷப்படுகின்றார். இப்படி என்று தெரிந்திருந்தால் நான் எப்பவோ அடி வாங்கி இருப்பேன் என சொல்லுகின்றார்.

அதன்பின்பு வீட்டுக்கு வந்ததும் அண்ணாமலை என்ன நடந்தது என்று கேட்க, பைக்கில் இருந்து விழுந்ததாக முத்து சொல்லுகின்றார். விஜயாவும் வந்து அக்கரையாக மீனாவிடம்  விசாரித்துவிட்டு தான் சமைப்பதாக சொல்லி செல்கின்றார்.

இறுதியாக ரோகிணி திடீரென்று எனக்கு மீண்டும் அவனால் டார்ச்சரா இருக்குது. அவன் ஜெயிலில் இருந்து வந்து விட்டான். இந்த முறை பெரிய அமௌன்ட் கேட்டு மிரட்டுகின்றான்.  அவனை ஒரு வழி பண்ணுமாறு சொல்ல, நீங்க என்ன தப்பு செய்தீங்க என்று சிட்டி கேட்கிறார்.

ஆனாலும் தனக்கு இந்த உதவியை செய்யுமாறு ரோகிணி கேட்க, இதுதான் சான்ஸ் என முத்துவிடம் ஒரு வீடியோ இருக்கு அந்த வீடியோவை எடுத்து தந்தால் தான் செய்வதாக சொல்லுகின்றார் சிட்டி. இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement