நடிகர் கவின் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய ஹீரோக்களில் ஒருவர். லிப்ட், டாடா ஆகிய படங்களின் வெற்றி இவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டாட வைத்துள்ளது.
ஸ்டார் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், அதை தொடர்ந்து வெளிவந்துள்ள Bloody Beggar திரைப்படமும் மக்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்று தான சொல்லவேண்டும்.
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் சிவபாலன் இயக்கத்தில் இப்படம் உருவானது. மேலும் இப்படத்தில் கவினுடன் இணைந்து ரெடின் கிங்ஸ்லி, சுனில் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த நிலையில், 3 நாட்களில் Bloody Beggar படம் உலகளவில் ரூ. 6.5 கோடி வரை வசூல் செய்துள்ளது.
Listen News!