நடிகர் யாஷ் தனது 19 ஆவது படமான ‘டாக்ஸிக்’ படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தை பிரபல நடிகை கீது மோகன் தாஸ் இயக்குகிறார். மேலும் இதில் கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, நயன்தாரா, ருக்மிணி வசந்த் உட்பட பலர் நடிக்கின்றனர்.
சமீபத்தில் இந்த படத்தில் நடிக்கும் கியாரா அத்வானி மற்றும் ஹுமா குரேஷியின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருந்தது. ஆக்சன் திரில்லர் நிறைந்த இந்தப் படத்தில் நடிகை ஹுமா குரேஷி 'எலிசபெத்' என்ற கேரக்டரில் நடிக்கின்றார்.
ஹுமா குரேஷி தொடர்பில் வெளியான போஸ்டரில் கல் சிலைகள், பழைய கல்லறைகள் பின்னணியில் காணப்படுகின்றன. கருப்பு உடையில் ஒரு விண்டேஜ் கருப்பு காருக்கு அருகில் அவர் காணப்படுகின்றார். இது அவருடைய தீவிரமான கேரக்டரை வெளிப்படுத்தியது.

அதே நேரத்தில், கே.ஜி.எஃப்: சேப்டர் 2- வெற்றிக்கு பிறகு யாஷ் நடிக்கும் மிகப்பெரிய படமாக டாக்ஸிக் படம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் பல மொழிகளிலும் டப்பிங் செய்ய திட்டமிடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கன்னட ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் பான் இந்திய படமாக உருவாகி வரும் டாக்ஸிக் படத்தில் இருந்து நயன்தாராவின் போஸ்டர் வெளியாகி உள்ளது. அந்தப் படத்தில் கங்கா என்ற கேரக்டரில் நயன்தாரா நடித்துள்ளார்.
Listen News!