சமீப நாட்களாகவே மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிஸில்டா இடையேயான பிரச்சனை பேசுபொருளாக காணப்படுகிறது. சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் அவருடைய தொழில் ரீதியாக பிரபலமானதை விட ஜாய் கிரிஸில்டா திருமண விவகாரத்தினாலேயே மேலும் பிரபலமடைந்தார்.
மாதம்பட்டி ரங்கராஜ் தனது தொழில் சார்ந்த விடயங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ஆனால் ஜாய், அவரை தாக்கி தனது குழந்தைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நாளுக்கு நாள் பல பதிவுகளை பகிர்ந்து வருகின்றார்.
கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு தான் அவர்களுக்கு முதலாவது திருமண ஆண்டு நடைபெற்றதாகவும் தெரிவித்தார். மேலும் பலர் தன்னிடம் ரங்கராஜ் DNA டெஸ்டுக்கு வந்தாரா என கேட்கின்றனர். ஆனால் அவர் எப்படி வருவார்? அறிக்கை மட்டும் தான் விட முடியும். ஆனால் ராக ரங்கராஜுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில், ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மற்றும் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதன்படி அவருடைய பதிவில், மாதம்பட்டி ரங்கராஜுக்கு 2 பொண்டாட்டி 3 மகன்கள் இதை யாராலையும் மாற்ற முடியுமா? முடியாது.. இது மாதம்பட்டி ரங்கராஜ் சாகும் வரை அழிக்க முடியாத உண்மை . இதை பொய் ஸ்டைல்மெண்ட் போட்டு அவரால் மறைக்க முடியுமா? குழந்தையின் சாபம் சும்மா விடுமா என்ன.? என்று பதிவிட்டுள்ளார்.
அதே நேரத்தில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னுடைய முதல் மனைவி ஸ்ருதியுடன் சாருக்கானை சந்தித்த வீடியோவை போஸ்டாக போட்டிருந்தார். தற்போது அவர்களுடைய பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
Listen News!