மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்வதாக சொல்லி ஏமாற்றினார் என்று ஜாய் கிரிஸில்டா அளித்த புகார் கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. ஆனாலும் ரங்கராஜ் தன்னை ஏமாற்றிய விரக்தியில் தொடர்ச்சியாக பல வீடியோக்களையும் பதிவுகளையும் வெளியிட்டு வருகின்றார் ஜாய்.
இந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தனக்கு அனுப்பிய மற்றொரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார் ஜாய் கிரிஸில்டா. அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதோடு ரங்கராஜை பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.
அதன்படி அவர் வெளியிட்ட வீடியோவில், என்னை மன்னித்துவிடு.. நான் ஒரு பொசசிவ்னஸ்ல இப்படி பண்ணிட்டேன் என்று மன்னிப்பு கேட்கின்றார். மேலும் வழமை போல தன்னுடைய காதலை உருகி உருகி கொட்டியுள்ளார்.
தற்போது இவருடைய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருவதோடு அதில் ரங்கராஜ் கொடுத்த ரியாக்ஷன்களும் ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே ஜாய் கிரிஸில்டா மாதம்பட்டிக்கு இரண்டு பொண்டாட்டி மூன்று குழந்தைகள் இதை அவர் சாகும் வரையில் அழிக்க முடியாது என பதிவிட்டு இருந்தார்.
அதே நேரத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவி உடன் ஷாருக்கானை சந்தித்த வீடியோக்களையும் வெளியிட்டு இருந்தார். அதன் பின்பே அவர் இப்படி தொடர்ச்சியாக பல பதிவுகளை வெளியிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
Listen News!