தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக வலம் வருபவர் ஏ. ஆர் முருகதாஸ். இவர் இயக்கத்தில் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் மதராஸி திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
தமிழில் ஏ. ஆர் முருகதாஸ் இயக்கிய படங்கள் வெற்றி பெற்று பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இவரது இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி படம் சூப்பர் ஹிட் கொடுத்தது. அதற்குப் பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படம் தோல்வியை தழுவி படு மோசமாக விமர்சிக்கப்பட்டது. அதன் பின்பு ஏ. ஆர் முருகதாஸ் இயக்கிய திரைப்படங்கள் தோல்வியை தழுவின.
இந்த நிலையில், தர்பார் படத்தின் தோல்வி குறித்து ஏ. ஆர் முருகதாஸ் மனம் திறந்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில், தர்பார் படத்தை இன்னும் பிரம்மாண்டமாக நுட்பமாக இயக்க வேண்டும் என்று நினைத்தேன். அந்தக் கதையில் நிறைய டிராவல் இருந்தது. ஆனால் அதெல்லாம் வேண்டாம் என்று சுருக்கி எடுத்தேன். ரஜினி சாரை வைத்து நிஜமான இடத்தில் படமாக்க வேண்டாம் எனவும் கருதினேன்.
அப்பா - மகள் கதையாகத்தான் இந்த கதை இருந்தது. அந்த கதையில் நயன்தாரா உள்ளே வந்தவுடன் கதையின் போக்கே மாறியது. மும்பை, பின்னணி நடிகர்கள் உள்ளிட்டவற்றை மாற்றி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ என்று தோன்றியது. குறுகிய காலத்தில் ரொம்ப சந்தோஷத்தில் இயக்கிய படம் வேறு அதன் கதையினை ரொம்ப சீக்கிரமே எழுதியது ஒரு காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
Listen News!