தமிழ் திரையுலகில் மைனா படம் மூலம் பிரபலமடைந்த நடிகை அமலா பால், அந்த வெற்றியின் பின்னர் முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்தார். விஜய், சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்ததுடன், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு கதாபாத்திரங்களில் திகழ்ந்துள்ளார்.
தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்த அமலா, தனது வாழ்க்கையில் எடுத்து வைத்த சில தீர்மானங்களால் தொடர்ந்து செய்திகளாகி வந்துள்ளார். இயக்குநர் A. L. விஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றார். அதன் பிறகு தொழிலதிபர் ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இப்போது இவர்களுக்கு இலை என்ற ஆண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அமலா பால் சமீபத்தில் தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. அதில் அவர் பிங் நிற சேலையில் ரசிகர்கள் மனதினை கொள்ளை கொண்டு வருகின்றார். இந்த நவீன ஃபேஷன் உடைகளில் காட்சியளித்துள்ள இந்த புகைப்படங்கள், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை சந்தோஷமாக அனுபவிக்கும் அமலா, தற்போது புதிய திரைப்படங்களிலும் பிசியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Listen News!