சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், ரோகிணி க்ரிஷை ஹாஸ்டலில் சேர்த்து விடுகின்றார். ஆனால் க்ரிஷ் நான் இங்கே இருக்க மாட்டேன், உன்னுடனே வந்துவிடுகின்றேன் என்று அடம் பிடிக்கின்றார். ரோகிணி எவ்வளவு சொல்லியும் க்ரிஷ் கேட்கவே இல்லை. இறுதியில் கிரிஷுக்கு அடிக்க போகின்றார். ஆனால் அங்கிருக்கும் ஆசிரியர் ஒருவர் குழந்தைக்கு அடிக்க வேண்டாம். போகப்போக பழகிவிடும் என்று சொல்லுகின்றார். இதனால் க்ரிஷும் எதுவும் பேசாமல் சென்று விடுகின்றார்.
அதன் பின்பு ரோகிணி க்ரிஷை ஹாஸ்டலில் சேர்த்து விடுவதை ரோகிணியின் அம்மா மறைந்திருந்து பார்க்கின்றார். பின்பு ரோகிணியிடம் வந்து அவன் உன் கூட இருக்கத்தானே விட்டுட்டு வந்தேன், இப்படி யாரும் இல்லாத அனாதை போல ஹாஸ்டலில் சேர்த்து இருக்கின்றாயே என்று பேசுகின்றார்.
ஆனாலும் ரோகிணி எனக்கு என்னுடைய வாழ்க்கை தான் முக்கியம். யார் கண்ணிலையும் படாமல் ஊருக்கு போய் சேரு என்று காசு கொடுத்து அனுப்புகின்றார். இதனால் ரோகிணியின் அம்மா கோபத்தில் சென்று விடுகிறார்.
இதை தொடர்ந்து மீனா ரோகிணியின் அம்மாவை சந்திக்கின்றார். இதன்போது ரோகிணியின் அம்மா நீங்க நல்லவங்க எங்களுக்கு ரொம்ப உதவி பண்ணி இருக்கீங்க.. ஆனால் நான் உங்ககிட்ட நிறைய மறைச்சிட்டேன் என்று சொல்லுகின்றார்.
அதற்கு மீனா இப்போ க்ரிஷும் அவங்க அம்மாவும் எங்கே? என்று கேட்க, பதில் சொல்ல முடியாமல் அங்கு வந்த பஸ்ஸில் ஏறிச் சென்று விடுகின்றார்.
இதை தொடர்ந்து வீட்டுக்கு வந்த மீனா, அத்தை சொன்னது உண்மைதான். க்ரிஷின் பாட்டியை தான் பார்த்ததாக சொல்லுகின்றார். இதன் போது ரோகிணிக்கு முகமெல்லாம் வேர்த்து அதிர்ச்சி அடைகின்றார்.
இன்னொரு பக்கம் செல்வம் தனது மச்சானை பைக்கில் அழைத்து வருகின்றார். ஆனால் அவருக்கு ஹெல்மெட் இல்லை. அந்த நேரத்தில் அருண் அங்கு நிற்பதை பார்த்துவிட்டு அவர் எனக்கு தெரிந்தவர்தான் சொல்லிவிட்டு செல்லலாம் என செல்லுகின்றார்கள். ஆனால் அருண் அவர்களை வழிமறித்து அவமானப்படுத்தி நிக்க வைக்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட் .
Listen News!