• Jan 18 2025

நாக சைதன்யாவின் புதிய காதலி சோபிதா... இப்படிப்பட்ட ஒருவரா... இதோ பலருக்கும் தெரியாத உண்மைகள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பல ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜோடியாக விளங்கியவர்கள் சமந்தா மற்றும் நாக சைதன்யா தம்பதியினர். ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை இவர்கள் இருவரும் திடீரென விவாகரத்துப் பெற்றுப் பிரிந்து விட்டார்கள். இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் சில காலமாக சோகமான பதிவுகளை மட்டுமே சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தனர். 

ஆனால் சமீபத்தில் நாக சைதன்யா அளித்திருந்த ஒரு பேட்டியில் தான் தன்னுடைய பழைய வாழ்க்கையிலிருந்து மீண்டு வந்துவிட்டதாகவும், புது வாழ்க்கையை ஆரம்பிக்கப் போவதாகவும் கூறி இருந்தார். இதனைக் கேட்டதும் பல ரசிகர்களும் குழப்பமடைந்திருந்தனர். அவர் கூறியது வேறு யாரையுமில்லை நடிகை சோபிதாவைத் தான். 


சோபிதா பொன்னியின் செல்வன் படத்தில் வானவி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவர் த்ரிஷாவின் நெருங்கிய தோழியாக நடித்திருந்தார். பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் போது பேமஸ் ஆனதை விடத் தற்போது நாக சைதன்யாவின் பேட்டியைத் தொடர்ந்து அதிகளவில் பேமஸ் ஆகி இருக்கின்றார் சோபிதா.

அதுமட்டுமல்லாது பல படங்களிலும் கமிட்டாகி ரொம்ப பிஸியாக நடித்து வருகின்றார். சமீபத்தில் சோபிதாவைத் தான் நாக சைதன்யா திருமணம் செய்து கொள்ளப் போகின்றார் என்ற விடயம் கூடி சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரலானது.


வானவியாய் பல ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த இவரின் நிஜப் பெயர் சோபிதா துலிப்பாலா என்பது தான். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் எனப் பல மொழிப் படங்களிலும் நடித்து வருகின்றார். 

இவர் மே 31 இல் 1990 இல் பிறந்தவர். ஏபியை சேர்ந்தவர். அப்பா ஒரு நேவி அலுவலர். அம்மா நேசஸரி ஸ்கூல் ரீச்சர். சோபிதா சின்ன வயது முதலே ரொம்ப நன்றாகப் படிக்கக் கூடியவர். இவருக்கு 16 வயது இருக்கும் பொது மும்பைக்கு சென்று குடியேறத் தொடங்கினார்கள்.


அங்கு இவர் தனது கல்லூரிப் படிப்பை படித்தார். அதாவது இவர் பொருளியல் துறையை தேர்ந்தெடுத்து அதில் சிறந்தும் விளங்கினார். இவ்வறாக கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நேரத்தில் குறிப்பாக 2013 இல் தனது நண்பி ஒருவரின் மூலமாக பியூட்டி பேஜன்ற் ஒன்றில் கலந்து கொண்டார்.  

மேலும் இவர் பெமினா மிஸ் இந்தியா,பெமினா மிஸ் இந்தியா ஏர்த் எனப் பல விருதுகளையும் வென்றிருக்கின்றார். அத்தோடு மிஸ் பியூட்டி, மிஸ் கோன்விடேன்ற் போன்ற பல சப் டைட்டில்களையும் வென்றிருக்கின்றார்.


இவருக்கு தமிழ் கொஞ்சம் கூடத் தெரியாது. பொன்னியின் செல்வன் டப்பிங் கூட இவருக்கு ரொம்பவே கஷ்டப்பட்டுத்தான் கொடுத்திருக்கின்றார்கள். இதனைத் தொடர்ந்தும் இவருக்குப் பல பட வாய்ப்புக்களும் வந்து குவிந்த வண்ணமே இருக்கின்றன.

Advertisement

Advertisement