• Jan 18 2025

தாய் கொலை செய்ய முயற்சித்தும் தப்பிய பிக்பாஸ் அமுதவாணன்: அதிர்ச்சி தகவல்!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் வீட்டில் அமுது என்று செல்லமாக அழைக்கப்படுவரே அமுதவாணன். இவர் ஒரு காமடியன், நடனகலைஞர், நடிகர் என்று சொல்லிக்கொண்டே போகலாம். 

இவர் கலக்கபோவது யாரு, சிரிச்சாபோச்சு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகளில் பங்குபற்றி இருந்தார், இவர் என்னதான் காமெடியனாக எல்லோரையும் சிரிக்க வைத்தாலும் இவரின் பின்னாலும் சோகமான சம்பவங்களும் உண்டு. தற்கொலைக்கும் கூட முயன்றுள்ளாராம்.

அமுதவாணன் மதுரையில் பிறந்துள்ளார், இவரது வீட்டில் மொத்தம் ஆறுபேர்  இதில் கடைசி பையன்தான் அமுதவாணன், இவர் தாயின் வயிற்றில் இருந்த போது இந்த குழந்தை வேண்டாம் என எண்ணி அவரது தாயார் கருக்கலைப்பு மருந்துகளை குடித்துள்ளார், இவ்வாறு கருக்கலைக்க முயற்சிப்பதும் ஒரு வகையான கொலை முயற்சிதான்.

அவ்வாறு இருந்தும் அதையெல்லாம் தாண்டி அமுதவாணன் பிறந்திருக்கின்றார், ஏழு வயதுவரை இவர் பேசவே இல்லை, இவரின் குடும்பத்தை பற்றி சொல்லவேண்டுமா யின் ஓரளவுக்கு வசதியான குடும்பம்தானாம்,  இவரது தந்தை சவுதியில் இருந்திருக்கின்றார். 


அமுதவாணன் பாடசாலை படித்த நாட்களில் கூட அவருக்கு சரியாக பேச்சு வருவதில்லையாம். இதனால் அநேகமான மாணவர்களின் கேலிகிண்டல்களுக்கு உள்ளானாராம். ஆனாலும் பேச்சு போட்டியில் கலந்துகொண்டு பரிசுபெற்ற பின்னரே தன்னாலும் பேச முடியும் என்ற தன்னம்பிக்கை வந்துள்ளது.

பேச்சு சரியாக வராததால் படிப்பை கூட கைவிட எண்ணிய அமுதவாணனை அவரது தந்தை அவரோடு சேர்த்து மொத்த குடும்பத்தையுமே நன்றாகே பார்த்துக்கொண்டார்.ஆனாலும் அவரது தந்தை சவுதியில் இருந்து வீட்டிற்கு வரும் போதெல்லாம் பொருளாதார ரீதியாக வீடு ஆட்டம் காண ஆரம்பிக்க வீட்டில் உள்ள அனைவரும் வேலைக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர்.

அவ்வாறாக அமுதவாணனும் குடும்பத்துக்கு உதவ வேலைக்கு செல்ல ஆரம்பித்தார், அதனால் தனது படிப்பை பாதியிலேயே நிறுத்தி உள்ளார்.இதனால ஊரில் இவரது குடும்பத்தை வசதியாக இருந்து வாழ்ந்து கெட்ட குடும்பம் என்று கூறி உள்ளனர்.


 சிறுவயதில் இருந்தே அமுதவாணனுக்கு விளையாட்டின் மேல் ஆர்வம் இருந்திருக்கின்றது, அதேவேளை ஸ்டேட் அளவிலான போட்டிக்கு தெரிவாகியும் கலந்துகொள்ள முடியாத சர்ந்தர்பங்கள் கூட காணப்பட்டிருக்கின்றது. நண்பர்கள் நாங்கள் பணம் சேர்த்துதருகின்றோம் நீ விளையாடு என்று கூறிய போது இல்லை நான் எனது குடும்பத்திற்காகவே உழைக்கின்றேனே தவிர என்னுடைய ஆசை ஒன்றும் பெரிதல்ல என கூறி உள்ளார்.

ஆகவே வீட்டுக்காக உழைக்க வேண்டும் என்பதனால் வீட்டிற்கு பொய் சொல்லிக்கொண்டு வேலைக்கு செல்ல ஆரம்பித்துள்ளார்., இவ்வாறாக ஒரு வேலைக்கு  சென்றிருந்த நேரம் ஸ்பூண் காலில் குத்தி அது பெரிதாகி மிக பெரிய பாதிப்பாக மாறி இருந்தது. அந்த காயத்துக்கு மருந்து கட்டிக்கொண்டு வீட்டிற்கு கொண்டு வரும் போதே வீட்டுக்காரர்கள்  வினவியபோதுதான் 4 மாதங்களாக வேலைக்கு செல்கின்றேன் என்ற உண்மையை கூறி உள்ளார்.

அப்போது அவர்கள் நீங்க வேலைக்கு போகவேண்டாம் என கூறியபோது அவரால் சும்மா இருக்கமுடியவில்லை.இதனால் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தவேண்டும் என நினைத்திருக்கின்றார். இதைவிட அமுதவாணனின் அண்ணா சிறந்த திறமையாளர்,  அவரை பார்த்துத்தான் அமுதவாணனும் திறமையாளராக காணப்பட்டிருக்கின்றார். அந்த நேரம் தான் கலக்கபோவது யாரு ஆடிசனில் கலந்து கொண்டிருந்தார் அமுதவாணன்.முதலாவது எபிசோட்டிலே விபத்து ஏற்பட்டு கை காலில் எல்லாம் காயம் மற்றும் கீறல் ஏற்பட்டிருந்தது, இதனால் அவரை இதற்கு வரவேண்டாம் ஓய்வு எடுக்கவும் என கூறி திருப்பி அனுப்பிவிட்டனர். 


நாம் என்ன செய்தாலும் தடங்கலாகவே போகிறது என மனவேதனைக்கும் விரக்திக்கும் அமுதவாணன் உள்ளாகினார்.பிறகு எப்படியாவது நான் மீண்டு வரவேண்டும் என எண்ணி முயற்சிசெய்து மூன்றே மாதங்களில் மறுபடியும் எழுந்து நின்றுள்ளார்.அதன்பின்னர் விஜய் டீவியில் மிக கஸ்ரப்பட்டு ஒரு வாய்ப்பு கிடைத்ததால் அதை தவறவிட கூடாது என்பதற்காக இவர் ஒவ்வொரு முறை போடும் வேடமும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருக்கின்றது.

இதனால் இவரை சின்னத்திரை ராமராஜன் என்று கூட சொல்லி இருக்கின்றார்கள்.இதைவிட சத்யராஜ் மாதிரியும் அழகாக வேடம் போட்டிருக்கின்றார்.சமையலில் கூட வல்லவர், இதைவிட கலக்கப்போவது யாரு டைட்டில் வின்னாராக வெற்றிபெற்றார்.அதன் மூலமாக மக்கள் மத்தியில் நான் திரும்பி வந்துவிட்டாதாக தெரிவித்தார். இவ்வாறு இவரது காமெடிக்காவே அநேக ரசிகர் பட்டாளம் உருவாகினர் எனலாம், விஜய் டீவிக்கு வந்தபின்னர் இவரது வாழ்க்கை பாதையே மாறிவிட்டது.இதனால இவருக்கு படவாய்ப்புக்கள் கூட கிடைத்தது. தாரைதப்பட்டை  படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதைபற்றி அவர் கூறும்போது அதுதான் தன்னுடைய முதல்படமும் கடைசிபடமும் என கூறி இருந்தார், ஆனா  அந்த படத்திற்கு பிறகும் அவருக்கு அநேகமான வாய்ப்புக்கள் வந்துள்ளன,  விசாலினுடைய கத்தி சண்டை படத்தில் சூரியினுடைய கேரெக்டருக்கு முதலில் இவரைத்தான்  கேட்டிருக்கின்றார்கள். இவர் வெளிநாடுகளுக்கு சென்றும் ஸ்ராண்டப் காமெடி செய்திருக்கின்றார், அப்போது அமெரிக்கா, ஜப்பானில் இவரது திறமையை பார்த்து பலர் வாயடைத்து போய்உள்ளனர். இவர் படங்களில் நடிக்கின்றார் என்பதனால் விஜய் டீ.வி நீங்க உங்க திரைத்துறை வாழ்க்கைய பாருங்க என்று கூறவும் இவர் விஜய் டீ.விக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். 

இதனால் தவறவிட்ட வாய்ப்புகளில் தர்மதுரை திரைப்படத்தில் கஞ்சா கருப்பு நடித்த  பாத்திரத்தை தவறவிட்டதை எண்ணி கவலையும் கொண்டுள்ளார். இவர் பேசும் போது அவரும் கருணாஸ்சும் ஒன்றாகத்தான் வளர்ந்துள்ளார் என கூறியுள்ளார். அதுக்கு காரணம் என்னவெனின் இவருக்கு நான்கு வயது இருக்கும் போது கருணாஸ் மேடை நிகழ்ச்சிகளில் பேப்பர்ல நிறைய வித்தியாச வித்தியாசமான உருவங்களை எல்லாம் கருணாஸ் செய்வாராம். அதனை பார்த்து இவர் உற்சாகமாயிருக்கின்றார்.

இந்த விடயமெல்லாம் கிரேசுக்கு கூட தெரியாதாம். ஒரு கட்டத்திலதான் கருணாஸ் அவர்கள் அட இவரா அந்த சின்னபையன் என நினைவுபடுத்திருக்கின்றார்.இவரை சின்னத்திரையில் நவரசதிலகம் என அழைத்திருக்கின்றனர். இவர் நிறைய பேரை வளர்த்து விட்டிருக்கின்றார். கலக்கபோவது யாரு புகழ் பாலா கூட அடிக்கடி தன்னை வளர்த்து விட்டது அமுதவாணன் அண்ணா என கூறி உள்ளார்.

ஆரம்பத்தில் அமுதவாணன் வளர்த்துவிட்டவர்களை வேண்டாம் என்று சொன்ன இயக்குனர்கள் இப்போது அமுதவாணனையே வேண்டாம் என தூக்கியெறிந்துள்ளனர்.இப்போது இந்த ரீ - என்றிக்கு பிறகு பலரும் வாயடைத்துபோய் உள்ளனர். 


எந்த வாய்ப்பு கேட்டாலும் வேண்டாம் என்று சொல்கின்றார்களே என எண்ணி விரக்தி அடைந்து 3 வருடமாக இவர் காணமலேபோய்விட்டார். மிகவும் அமைதியாகி தனியாகவே யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். குடும்ப நிகழ்ச்சிகளுக்கு சென்றால் அங்குள்ளவர்கள் அடுத்து என்ன அமுதா என்று கேட்டாலும் அமைதியாகவே இருந்துள்ளார். 


இவ்வாறு விரக்தியில் ஒரு நாள் ஓட்டு போக போகும் போது தன்னுடைய பெயரையே தவறாக எழுதி உள்ளார். அதை பார்த்த அண்ணன் என்ன என்று கேட்டதோடு அவரை கூப்பிட்டு பேசி ஆறுதலும் கூறி உள்ளார். இவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அதனைவிட தனிமையை தேடியகாலத்தில் இவர் தற்கொலைக்கு கூட முயன்றுள்ளார்.இது அத்தனையையும் கடந்து இன்று சிறப்பாக பிக்பாஸ் மூலம் மறுபடியும் தன்னை நிருபித்து இருக்கின்றார் அமுதவாணன்.

Advertisement

Advertisement