• Jan 19 2025

உதயநிதி கொடுத்த ஒரு கோடி ரூபாய் கடனா? 30 நடிகர்களை குறி வைத்ததால் பரபரப்பு..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக சமீபத்தில் அமைச்சர் உதயநிதி நடிகர் சங்க நிர்வாகிகளிடம் ஒரு கோடி ரூபாய் காசோலை கொடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலானது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த பணம் நடிகர் சங்கத்திற்கு உதயநிதியால் கடனாக கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் அதேபோல் 30 நடிகர்களிடம் தலா ஒரு கோடி ரூபாய் கடன் வாங்க நடிகர் சங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் சங்க கட்டிடம் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் நிலையில் இந்த கட்டிடத்தை முடிக்க இன்னும் 30 கோடி ரூபாய் தேவைப்படுவதாக கூறப்பட்டது. இதன் காரணமாக பணம் இல்லாததால் கட்டிடம் கட்டும் பணி நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது இதற்கு ஒரு புதிய திட்டம் நடிகர் சங்க நிர்வாகிகளால் தீட்டப்பட்டுள்ளது.



இதன்படி தமிழ் சினிமாவில் முன்னணியில் உள்ள 30 நடிகர், நடிகைகளிடம் தலா ஒரு கோடி ரூபாய் கடன் வாங்குவதாகவும் அந்த கடனுக்கு வட்டி ஏதும் தராமல் ஒரு சில ஆண்டுகளில் அசல் மட்டும் திருப்பி கொடுக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது. 

இதற்காக முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் கிட்டத்தட்ட பலர் ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த திட்டம் அமைச்சர் உதயநிதியால் தொடங்கப்பட்டதாகவும் தெரிகிறது. அப்படி என்றால் உதயநிதி கொடுத்த ஒரு கோடி ரூபாய் என்பது கடனா? அல்லது அவர் நன்கொடையா கொடுத்தாரா? என்பது உறுதியாக தெரியவில்லை என்றாலும் மற்ற நடிகர்களிடம் வாங்க போவது கடன் தான் என்றும் ரஜினி, கமல் உள்பட முன்னணி நடிகர்கள் நடிகர் சங்கத்திற்காக தலா ஒரு கோடி ரூபாய் கடன் கொடுக்க ஒப்பு கொண்டதாகவும் கூறப்படுகிறது. 

மொத்தத்தில் நடிகர் சங்க கட்டிடத்திற்கு விடிவுகாலம் ஏற்பட்டு விட்டதாகவும் விரைவில் இந்த கட்டிடத்தின் பணிகள் தொடங்கி இந்த ஆண்டு திறப்பு விழா காணப்படும் என்றும் கூறப்படுகிறது.

 


Advertisement

Advertisement