• Jan 19 2025

அதைக் கேட்டதும் என் இதயம் நடுநடுங்கியது! ஐஸ்வர்யா கடும் வேதனை

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

இந்திய அளவில் பரபரப்பாக பேசப்படும் சம்பவம் தான் புதுச்சேரி சிறுமியின் உயிரிழப்பு. தற்போது குறித்த பெண் குழந்தையின் உயிரிழப்பிற்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. குறித்த சிறுமியின் உயிரிழப்பிற்கு நீதி கேட்டும் பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.

இன்றைய தினம் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பெண்களுக்கு இன்னமும் பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் தான் வாழ்ந்து வருகிறோமோ? என திரைப்  பிரபலங்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றார்கள்.

இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவும் தனது ஆதங்கத்தையும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,


இன்றைய தினம் சர்வதேச பெண்கள் தினம் நடத்தப்பட்டு வரும் நிலையில், அனைத்து பெண்களும் சிவபெருமானிடம் கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும். 

இனி எந்த ஒரு பெண்ணுக்கும், பெண் குழந்தைக்கும் இதுபோன்ற சம்பவம் நடக்கக்கூடாது. மனித ரூபத்தில் உலாவும் பிசாசுகள் கையில் எந்த இடத்திலும் பெண்கள் சிக்கி சின்னா பின்னமாக கூடாது.


இது போன்ற கேடு கெட்டவர்களை கடவுள் கண்டிப்பாக தண்டிப்பார். எல்லா சட்டமும் கடவுளும் அவர்களுக்கான தண்டனையை அளிக்காத பட்சத்தில், அந்தப் பெண் குழந்தைக்காக தன்னுடைய கண்ணீர் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் உயிரிழந்த பெண் குழந்தையின் ஆத்மா சாந்தி அடையவும் அவர் பிரார்த்தனை மேற்கொண்டுள்ளார்.

இந்த விஷயத்தை கேட்டபோது தன்னுடைய இதயம் நடுங்கியதாகவும் ஐஸ்வர்யா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement