• Jan 19 2025

என் பையன் எவ்வளவோ அட்ஜஸ்ட் பண்ணினான்.. ஆனால் சைந்தவி..? ஜிவி பிரகாஷின் அம்மா பகிர்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

ஹாலிவுட்டில் பிரபல ஜோடியாக திகழ்ந்தவர்கள் தான் ஜிவி பிரகாஷ் - சைந்தவி. இவர்கள் இருவரும் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டார்கள். அதேபோல இருவரும் இசை மீது மிகுந்த ஆர்வம் கொண்டவராகவும் சிறந்த பாடல் ஆசிரியர்களாகவும் காணப்படுகின்றார்கள்.

ஜிவி பிரகாஷ் பாடல் ஆசிரியராக மட்டுமில்லாமல் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் திகழ்ந்து வருகின்றார். இவரது நடிப்பில் வெளியான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

பள்ளி பருவத்திலேயே காதலிக்க தொடங்கியவர்கள் அதன்பின்  திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. ஆனால் திடீரென சமீபத்தில் தனது மனைவியை பிரிவதாக ஜிவி பிரகாஷ் அறிவித்திருந்தார். இது  பிரபலங்களுக்கு மட்டும் இல்லாமல் ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியாக காணப்பட்டது.

இதை தொடர்ந்து அவர்கள் இருவரும் தமது வேலைகளில் பிசியாக காணப்படுகின்றார்கள். தாங்கள் பிரிந்தாலும் தங்களுக்குள்ளேயே சிறந்த நட்பு ஒன்று இருப்பதாக அவர்கள் தெரிவித்து இருந்தார்கள்.


இந்த நிலையில், ஜிவி பிரகாஷின் அம்மா தற்போது சைந்தவி பற்றி சில விஷயங்களை தெரிவித்துள்ளார். இந்த தகவல் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி உள்ளன.

அதாவது அவர்கள் இருவரும் சேர வேண்டும் என்று அவங்க தான் முடிவு பண்ணினாங்க. இப்போ அவங்க தான் பிரியனும் என்று முடிவும் எடுத்திருக்காங்க. நான் பிரியாதே சேராதேன்னு சொன்னா சேர போறாங்களா? இல்லை. 

எல்லாம் விதி. சைந்தவி ஒரு அற்புதமான பொண்ணு.  என் பையனும் நிறைய அட்ஜஸ்ட் பண்ணி இருந்தான். இருந்தாலும் அவனுக்கு அவர்களை அட்ஜஸ்ட் பண்ண கடினமா இருந்தது. இந்த பிரிவு எல்லாம் எதற்காக நடக்கின்றது என்று எனக்குத் தெரியாது. நான் நிஜமாகவே சைந்தவி மீண்டும் வீட்டிற்கு வரவேண்டும் என்று விரும்புகின்றேன் எனது ஜிவி பிரகாஷின் தாயார் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement