• Jan 19 2025

வயிற்றெரிச்சல் பிடித்த முத்து என்ன பெரிய ஆணி புடிங்கிட்டான்? மீண்டும் சர்ச்சையை கிளப்பிய சுசித்ராவின் வீடியோ

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பாடகராக திகழ்பவர் தான் வைரமுத்து. இதுவரைக்கும் 7000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி உள்ளார். கிட்டத்தட்ட ஏழு தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். தற்போது வரையில் இளைய பாடல் ஆசிரியர்களுக்கு போட்டியாக திகழ்ந்து வருகின்றார்.

இவர் எழுதியுள்ள நாவல்கள். சிறுகதைகள். கவிதைகள் என்பவற்றுக்காகவே தன்னை ஒப்புக் கொடுத்தவர். அரச பணி செய்து கொண்டு இருந்தவருக்கு, சினிமா மீது ஆர்வம் ஏற்பட்டதை தொடர்ந்து பாரதிராஜா இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவான நிழல்கள் படத்தில் தனது முதலாவது பாடலை எழுதினார். முதல் பாடலிலேயே வானம் எனக்கொரு போதிமரம் என்று எழுதி பலரை மெய் சிலிர்க்க வைத்தார்.

இதன் காரணமாக இளையராஜாவின் கோட்டைக்குள் முக்கிய கவிஞராக மாறினார் வைரமுத்து. இரண்டு பேரும் இணைந்து சிந்து பைரவி, மண்வாசனை, புன்னகை மன்னன், முதல் மரியாதை, கடலோர கவிதைகள் என ஏராளமான படங்களில் பணி புரிந்தார்கள். ஆனாலும் இவர்களுடைய கூட்டணி சில காரணங்களினால் உடைந்தது. தற்போது இருவரும் தங்களது பணியில் பிஸியாக இருந்து வருகின்றார்கள்.


இவ்வாறான நிலையில் பிரபல பாடகி சுசித்ரா வைரமுத்து பற்றி பல சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு வந்தார். தற்போது மீண்டும் இவர்களுக்கு இடையிலான பிரச்சனை சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.

இந்த நிலையில், தற்போது சுசித்ரா மீண்டும் ஒரு வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வைரமுத்து பற்றி கண்டபடி பேசியுள்ளார். அவர் எழுதிய பாடல்கள் பற்றியும் தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement