சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, அருணின் அம்மா சீதா வீட்டிற்கு வந்து நடந்த எல்லா விஷயத்தையும் அருண் சொன்னான் சீதா ரொம்பவே நல்ல பொண்ணு அவளை மாதிரி ஒரு பொண்ணு எனக்கு மருமகளாக வர நான் கொடுத்து வச்சிருக்கணும் என்கிறார். மேலும் நானே வீட்ட வந்து பேசணும் என்று நினைச்சேன் அதுக்குள்ள என்னவோ எல்லாம் நடந்திருச்சு என்று சொல்லுறார்.
இதனை அடுத்து அருணின்ர அம்மா மீனாவப் பாத்து முத்து உங்கட புருஷனா என்று கேக்கிறார். அதுக்கு மீனா ஆமா அவர் என்ர புருஷன் தான் என்று சொல்லுறார். பின் முத்துவால தான் எல்லாப் பிரச்சனையும் வந்தது என்கிறார் அருணின்ர அம்மா. மேலும் நீங்க யாரும் அருணைப் பற்றி தப்பா நினைக்காதீங்க என்று சொல்லுறார்.
அதைத் தொடர்ந்து சீதா என்ர மருமகளாக வந்தால் அதைவிட சந்தோசம் வேற எதுவும் இல்ல என்றும் அருணின்ர அம்மா சொல்லுறார். பின் மீனாட அம்மா சீதாவுக்கு ஒரு நல்லது நடக்கணும் என்று நினைக்கிற முதல் ஆளு முத்து தான். ஆனா அவருக்கு அருணைப் பிடிக்கல அதுதான் கொஞ்சம் ஜோசனையா இருக்கு என்று சொல்லுறார்.
மேலும் முத்துவுக்கு பிடிக்காத எதையும் நாங்க செய்யமாட்டோம் கல்யாணம் பற்றிக் கதைக்கிறது என்றால் இங்க வரவேண்டாம் என்றும் சொல்லுறார். அதைத் தொடர்ந்து அருண், யாரு தடுத்தாலும் சீதா தான் எனக்குப் பொண்டாட்டி அவள் தான் உனக்கு மருமகள் என்று அம்மாவுக்கு ஆறுதலாகச் சொல்லுறார்.
அதனை அடுத்து சீதா முத்துவைப் பாத்து அருண் ரொம்பவே நல்லவர், அவருக்கு கல்யாணம் பண்ணிக்கொடுங்க என்று சொல்லுறார். இதைக் கேட்ட முத்து ரொம்பவே கோபப்படுறார். மேலும் அருண் நல்லவன் இல்ல அவனைக் கல்யாணம் பண்ண வேண்டாம் என்கிறார். பின் அருண் மீனாகிட்ட சீதாவைக் கல்யாணம் செய்ய ஹெல்ப் பண்ணச் சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!