• Oct 13 2024

பாடிகார்டை அடித்து படுக்கவைத்த முத்து.. அதிர்ச்சியில் மனோஜ்! ரோகிணி எஸ்கேஎப்

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், முத்து தான் லெட்டர் எழுதி வைத்திருக்க வேண்டும். அதனால இரண்டு பேரும் வீட்டை விட்டு வெளியே போங்க என்று விஜயா சொல்ல, அப்படி எல்லாம் போக முடியாது இதுவும் என் வீடு தான் என மீனா  கோபப்படுகின்றார். உடனே முத்தை வர சொல்லுமாறு விஜயா சொல்ல முத்துவும் அந்த நேரத்தில் வந்து நிற்கின்றார்.

எதுக்கு என்ன தேடின என்று முத்து கேட்க, இரண்டு பேரும் ஒரேடியாக வெளியே போகலாமா என்று கோபமாக சொல்கின்றார். முத்து ஏதும் பிரச்சனையா என்று கேட்க, அங்கு நடந்தவற்றை சொல்லுகின்றார். இதனால் கோபத்துடன் உள்ளே போன முத்து மனோஜை துரத்தி துரத்தி அடிக்க, மனோஜ் அங்குமிங்கும் ஓடுகின்றார். இதனால் அண்ணாமலை அவரை கத்தி நிறுத்துகின்றார்.

மேலும் இவனுக்கு ஏன் கடுதாசி போடணும் கோவம் வந்தால்  நேரில் போட்டு மிதிக்க போறேன், இல்ல மூஞ்சிக்கு நேரா பேசுவேன் என்று சொல்ல, மனோஜ் நீதான் பண்ணினா என்று சொல்லிக் கொண்டே இருக்கின்றார். இதனால் முத்துவுக்கு கோபம் அதிகமாகின்றது. பாடிகாட் பின்னால் மனோஜ் ஒழிந்து பேசவும் பாடிகாட்டை ஒரே அடியில் அடித்து படுக்க வைக்கின்றார். இதனை பார்த்த குடும்பத்தினருக்கும் மனோஜ்ம் விழி பிதுங்கி நிற்கின்றார்கள்.


அதன் பின்பு பாடிகார்ட் குழந்தை போல அழ என்னடா ஹல்க்  மாதிரி அழுகிற என்று மனோஜ் கேட்கிறார். இதை பார்த்து குடும்பத்தினர் சிரிக்கின்றார்கள். மேலும் முத்து எனக்கு அப்பவே கால் பண்ணி இருந்தால் நான் அவனுக்கு நாலு அடி போட்டு உண்மையை சொல்ல வைத்திருப்பேனே என்று சொல்கின்றார்.

அந்த நேரத்தில் மீனா தனக்கு ஒன்று தோன்றுவதாக சொல்லி இவருக்கு லெட்டர் கொடுத்த சாமியார்தான் இதை பண்ணியிருக்கணும் என்று சொல்லுகின்றார். இதை கேட்டு  ரோகிணி அதிர்ச்சி அடைகின்றார். அத்துடன் முத்துவும் நீ தப்பு பண்ணி இருக்கணும் இல்ல, உன் கூட இருக்கிறவங்க தப்பு பண்ணி இருக்கணும் அதனால தான் பிளாக்மெயில் பண்ணுறாங்க என்று சொல்லுகின்றார்.

இதனால் அண்ணாமலை போலீசில் கம்ப்ளைன்ட் கொடுக்குமாறு சொல்ல, ரோகிணி வேண்டாம் பிசினஸ் பாதிக்கப்படும் என்று சொல்லி சமாளிக்கின்றார். அதன் பிறகு எல்லாரும் போனதும் முத்து இதனை சும்மா விடமாட்டேன் கண்டுபிடிப்பேன் என்று சொல்ல, ரோகிணி கதவோரம் நின்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement