• Jan 19 2025

ஈஸ்வரிக்கு எதிராக திரும்பிய இனியா, செழியன்.. பேரதிர்ச்சியில் பாக்கியா

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், இனியாவை டான்ஸ் காம்படீஷனில் கலந்து கொள்ள வேண்டாம் என்று ஈஸ்வரி சொல்லுகின்றார். பாக்கியாவும் படிப்பு கெட்டுவிடும் படித்து முடித்த பிறகு என்னவென்றாலும் செய்யுமாறு சொல்லுகிறார். 

இதனால் இனியா என்ன செய்வது என்று தெரியாமல் கோபிக்கு போன் பண்ணி தான் உங்களை சந்திக்க வேண்டும் என்று சொல்கின்றார். கோபியும் இதுதான் சான்ஸ் என இனியாவை ராதிகா வீட்டுக்கு அழைத்துச் செல்கின்றார்.

அங்கு சென்றதும் ராதிகா, இனியா இனி இங்க தான் இருக்க போறாளா என்று கேட்க, இல்லை நான் டேடியோட கதைக்க வந்தேன் என்று சொல்லுகின்றார். அதன் பின்பு தான் டான்ஸ் கம்பெட்டிஷனில் பங்கு பற்றி வெற்றி பெற்றதாக சொல்ல, கோபியும் ராதிகாவும் சந்தோஷப்படுகிறார்கள் .

மேலும் இரண்டு மாத பிராக்டிஸ் நடக்கும், டிவில ஷோ நடக்கும் என்று சொல்ல, கோபி முதலில் இதில் பங்கு பற்ற வேண்டுமா என்பது போல இழுக்கின்றார் . இதனால் இனியா கோபப்பட்டு வீட்டையும் புரிந்து கொள்ளுகிறார்கள் இல்லை உங்களிடம் சொன்னால் நீங்களும் புரிந்து கொள்ள இல்லை என்று கோவத்தில் கிளம்பி செல்ல முனைகிறார்.


இதனால் பாக்கியா வேண்டாம் என்று சொன்ன காரணத்தினால்  கோபி தான் சப்போர்ட் பண்ணுகின்றேன் நீ  கலந்து கொள்ளு என  சொல்லுகிறார் .

மறுபக்கம் இனியாவை காணோம் என்று பாக்கியாவும்  ஜெனியும் வாசலில் நிற்க , கோபி இனியாவை கொண்டு வந்து விடுகின்றார் . அதன் பின்பு ஏன் சொல்லாமல் போனாய் என்று விசாரிக்க,  ஈஸ்வரியும் இனியாவை  திட்டுகின்றார் . இதனால் நீங்கள் சொல்லும் போது கதைக்கவும் நீங்கள் வெறுக்கும்போது வெறுக்கவும் என்னால் முடியாது என்று ஈஸ்வரியை எதிர்த்து பேசுகிறார் இனியா.

இதனால் ஈஸ்வரி கோபி மீது கோபப்பட்டு சின்ன பெண்ணை எங்கள் பக்கம் திருப்பி உள்ளார் என்று கோபிக்கு திட்ட , அந்த நேரத்தில் செழியனும் சும்மா அவரை திட்ட வேண்டாம் என்று கோபிக்கு சப்போர்ட் பண்ணி பேசுகின்றார் . இதனால் பாக்கியாவுக்கும் ஈஸ்வரிக்கும் அதிர்ச்சி ஏற்படுகின்றது . அதன் பின்பு ஈஸ்வரி ஒன்றும் பேசாமல் ரூமுக்கு சென்று விடுகின்றார் . ஆனால் பாக்கியா இனிமேல் அந்த ஆளோட கதை வரக்கூடாது என்று பேசி செல்கின்றார் .

Advertisement

Advertisement