• Jan 19 2025

’கில்லி’ போலவே ரீரிலீஸ் ஆகும் ‘மெட்டி ஒலி’ சீரியல்.. எந்த தேதி? என்ன நேரம்?

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

சமீபத்தில் விஜய் நடித்த ‘கில்லி’ உட்பட சில சூப்பர் ஹிட் திரைப்படங்கள் ரீரிலீஸ் ஆகி வரும் நிலையில் அந்த நோய் தற்போது சீரியலுக்கும் தொற்றிக் கொண்டது போல் தெரிகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் சூப்பர் ஹிட் ஆன ’மெட்டி ஒலி’ சீரியலும் தற்போது யூடியூபில் ரீரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 90களின் பார்வையாளர்கள் ’மெட்டி ஒலி’ தொடரை மறந்து இருக்க முடியாது என்றும் குறிப்பாக ’அம்மி அம்மி அம்மி மிதித்து’ என்ற டைட்டில் பாடலை இன்னும் பலருக்கு ஞாபகம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்து பெண் பிள்ளைகளை பெற்ற தந்தை திருமணத்திற்கு பிறகு மகள்கள் வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்வுகளை விறுவிறுப்பாகவும் மிகைப்படுத்தாமலும் எடுக்கப்பட்ட தொடர் தான் இது என்பதும் இந்த தொடரின் இரண்டாம் பாகம் இன்னும் சில மாதங்களில் வர இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு ’மெட்டி ஒலி’ தொடர் தற்போது முன்னணி யூடியூப் தளத்தில் ரீரிலீஸாக இருப்பதாகவும் மே 1ஆம் தேதி முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த தொடரை 90களின் பார்வையாளர்கள் மட்டுமின்றி தற்போதைய பார்வையாளர்களும் ரசிக்கும் வகையில் இருக்கும் என்றும் கண்டிப்பாக இந்த தொடர் ’கில்லி’ படம் போலவே சூப்பர் ஹிட் ஆகும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தால்  அடுத்தடுத்து மற்ற சூப்பர் ஹிட் ஆன சீரியல்கள் ரீரிலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

Advertisement

Advertisement