• Jan 19 2025

அடுத்தடுத்து 12 புதிய சீரியல்களை களமிறக்கும் சன் டிவி.. மாஸ்டர் பிளான் என்ன தெரியுமா?

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஏற்கனவே சில சீரியல்கள் முடிவடைந்த நிலையில் இன்னும் சில சீரியல்கள் முடிவடையும் நிலையில் இருப்பதால் அடுத்தடுத்து சில சீரியல்களை ஆரம்பிக்க இருப்பதாகவும் நேற்று முதல் ’மல்லி’ சீரியல் ஆரம்பமானதை அடுத்து இன்னும் சில சீரியல்கள் ஆரம்பமாகும் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்னும் சில மாதங்களில் 12 புதிய சீரியல்களை தொடங்க சன் டிவி திட்டமிட்டிருப்பதாகவும் ஆனால் ஒரே நேரத்தில் அந்த சீரியல்களை தொடங்காமல் நான்கு சீரியல்களை முதலில் வெளியிட்டு, அதன் பிறகு ஒரு சிறிய இடைவெளி விட்டு நான்கு சீரியலும் இன்னும் ஒரு சிறிய இடைவெளி விட்டு நான்கு சீரியலும் வெளியிட மாஸ்டர் பிளான் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அந்த வகையில் தற்போது ’மல்லி’ சீரியல் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில் ’புன்னகை பூவே’ ’ராமாயணம்’ மற்றும் அனாமிகா ஆகிய மூன்று சீரியல்கள் தொடங்க இருப்பதாக தெரிகிறது. இதில் ’புன்னகை பூவே’ சீரியல் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் என்றும் ராமாயணம் மற்றும் அனாமிகா நான்பிரைம் டைமில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல் மலர் சீரியல் 3 மணிக்கு தொடங்கி 3.30 மணிக்கு முடிவடையும் நிலையில் அதன்பின் இதுவரை திரைப்படம் தான் ஒளிபரப்பாகி வந்தது. ஆனால் தற்போது 3.30 மணிக்கு ஒரு சீரியல் ஒளிபரப்பாக இருப்பதாகவும் அதற்கு பதிலாக திரைப்படத்தை 2 மணி நேரமாக எடிட் செய்து குறைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்த  நான்கு சீரியல்களாக தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் சீரியல், மிராக்கிள் மீடியா தயாரிக்கும் சீரியல் மற்றும் கலாட்டா கல்யாணம் உள்பட 4  சீரியல்களை களம் இறக்க சன் டிவி திட்டமிடப்பட்டுள்ளது.

இதனை அடுத்து ஒரு சிறிய இடைவெளி விட்டு ’ஆடுகளம்’ சீரியல் ’தோழி’ சீரியல், சுவாதி நடிக்கும் புதிய சீரியல் உள்பட 4 சீரியல்கள் தொடங்க இருப்பதாகவும் தெரிகிறது. மொத்தத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சன் டிவியில் 12 புதிய சீரியல் ஆரம்பமாக உள்ளதால் டிஆர்பி ரேட்டிங் இன்னும் உச்சத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Advertisement

Advertisement