• Jan 19 2025

மீனா கதறி அழுவதை பார்த்து கைதட்டி சிரித்த மிருக ஜாதிகள்! கிரிமினல் வேலை பார்த்த ரோகிணி

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில்,  மீனாவின் வாடிக்கையாளருக்கு பூ கொடுத்ததை நினைத்து ரோகிணியிடம் புலம்பிக் கொள்கிறார். முதல்ல அந்த பூக்கடையை தூக்கணும் என சொல்லி புலம்பிக் கொள்கிறார். பார்வதிக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்ல நினைக்க, வேண்டாம் பார்வதிட்ட சொன்னா அவ நாலு பேருக்கு சொல்லுவா என போனை வைத்து விட, பார்வதி ரோகிணிக்கு போனை போட்டு விஷத்தை கேட்க, அவரும் சொல்லி  விடுகிறார்.

இதையடுத்து நான் ஒரு ஐடியா சொல்கிறேன் என ரோகிணி விஜயாவுக்கு ஏற்றி விடுகிறார். அதன்படியே கார்ப்பரேஷன் கம்பெனிக்கு கால் பண்ணி மீனா பூக்கடை பற்றி கம்பளைண்ட் பண்ணுகிறார். அதன் பின்பு அங்கு வந்த கார்ப்பரேட் காரர்கள் மீனா இருந்த பூக்கடையை சுக்குநூறாக  உடைக்க அந்த நேரத்தில் அங்கு வந்து மீனா கத்தி அழுகிறார். இதைப்பார்த்து அங்கிருந்து விஜயாவும் ரோகினின் சிரித்துக் கொள்கிறார்கள்.


மீனா அவர்களிடம் கடையை விடுமாறு கெஞ்ச, அவர்கள் இங்கு கம்பளைண்ட் வந்திருக்கு அதனாலதான் கடைய எடுக்கிறோம்  என சொல்லுகிறார். அண்ணாமலையும் அங்கு வந்து அவர்களுடன் கதைத்து பார்க்க அவர்கள் கடையை தூக்கி எடுத்துச் சொல்கிறார்கள்.

அதன் பின்பு மீனா வாசலில் நின்று அழுது கொண்டிருக்க, அங்கு வந்த முத்து கடையை காணவில்லை என்ன நடந்தது என  விசாரிக்கிறார். அதன்பின், நான் பக்கத்து வீட்டுக்கும் போய் அவ கிட்ட கேக்குறேன் அவங்க மேல தான் சந்தேகமா இருக்கு என சொல்ல, அண்ணாமலை எத்தனை பேருட்ட அப்படி கேட்க போறா   என தடுக்கிறார். 

அதன் பின்பு விஜயாவை பார்க்க, விஜயா முழித்துக் கொண்டு, என்ன நான் செய்தேன் என்று சொல்லப் போறியா எனக் கேட்க, நீங்கசெய்து இருக்க மாட்டீங்க யாரோ கிரிமினல் வேலை செய்றவங்க தான் இதை செய்து இருக்கணும் கண்டுபிடிக்கிறேன் என சொல்லுகிறார்.

மறுபக்கம் மீனா அழுது கொண்டிருக்கிற, அண்ணாமலை முத்துவிடம் அவரை சமாதானப்படுத்துமாறு சொல்கிறார். அதன் பின்பு ரோகிணியும் விஜயாவும் கிச்சனுக்கு சென்று கைதட்டி சிரிக்கிறார்கள். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement