• Jan 19 2025

துபாய் மழையில் சிக்கி கொண்டாரா தளபதி விஜய்? ஓட்டு போட வருவாரா? பரபரப்பு தகவல்..

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

தமிழகத்தில் இன்று பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் சென்னையில் திரையுலக பிரபலங்கள் பலர் வாக்களித்து வருகின்றனர் என்பதை பார்த்தோம். 

குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தல அஜித், நடிகர் சிவகார்த்திகேயன், ராதிகா மற்றும் அவரது கணவர் சரத்குமார், கார்த்திக் அவரது மகன் கௌதம் கார்த்திக், குஷ்பு மற்றும் அவரது கணவர் மகள்கள் உள்பட பலர் வாக்களித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. 

ஆனால் எந்த தேர்தல் என்றாலும் முதல் நபராக வாக்களிக்கும் நபர்களில் ஒருவர் தளபதி விஜய் இன்னும் வாக்களித்ததாக புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. 

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி நேற்று ரஷ்யாவில் இருந்து கிளம்பிய விஜய் துபாயில் சிக்கி கொண்டதாகவும் அங்கிருந்து அவர் சென்னை வர முடியாத நிலை இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக துபாயில் கனமழை பெய்ததால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்றும் கனமழை பெய்ததாகவும் இதனால் விமானங்கள் தாமதமாக கிளம்பி வருவதாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் விஜய் சென்னைக்கு சில மணி நேரங்கள் தாமதமாக வருவார் என்றும் அதன் பின் அவர் வாக்களிக்க செல்வார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் விமான சேவையை பொருத்து தான் விஜய் சென்னை வர முடியும் என்றும் ஒருவேளை விமானங்கள் ரத்து செய்யப்பட்டால் அவர் சென்னை வருவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில் விஜய் சென்னை வருவாரா? சரியான நேரத்திற்குள் வாக்களிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement