• Jan 18 2025

சிறகடிக்க ஆசை சீரியல் மீனா ஆரம்பத்தில் இந்த நிலைமையிலா இருந்தாரா! விஷயத்தை கேட்டு வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நாளுக்கு நாள்  ரசிகர்களுக்கு ஏத்தாற் போல புது புது சீரியல்கள் அறிமுகம் ஆகி வருகிறது. அதுவும் விஜய் டிவியில் சமீபத்தில் அறிமுகமான சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடுகிறது. கதாநாயகி ஒரு ஏழை குடும்பத்தை சார்ந்தவராக இருக்கிறார்.  எனினும் பொதுவாக சின்னத்திரை என்றாலே அங்கே கதாநாயகி கஷ்டப்பட்டவராக இருப்பார். கதாநாயகன் பெரிய பணக்காரராக இருந்து அம்மா பேச்சை தட்டாதவராக இருப்பார்.


ஆரம்பத்தில் யாரோ ஒருவரின் வற்புறுத்தலினால் திருமணம் செய்து கொள்வார்கள். இதன் பின்னர்  இருவரும் காதலிப்பார்கள் ஆனால் கதாநாயகனின் அம்மா இவர்கள் இருவரையும் சேர விடாமல் பிரச்சனை செய்வார்கள். இது பல வருடங்களாகவே சின்னத்திரையில் ஒரு தொற்று நோயாக தொற்றிக் கொண்டு வருகிறது. எந்த சேனலிலும் இதே கதை தான் ரிப்பீட்டாகி கொண்டிருக்கிறது. கொஞ்சம் பட்டரிங் டிங்கரிங் மட்டும் செய்யப்படுகிறது.


அதுபோலத்தான் சிறகடிக்க ஆசையும் சீரியலும் உள்ளது. ஆனால் இங்கே கதாநாயகன் பெரிய பணக்கார வீட்டு பையனும் இல்லை அதுபோல அம்மாவுக்கும் பிடிக்காத பையன். கதாநாயகி மீனா பார்த்தாலே ஐயோ பாவம் என்கிற மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு வீட்டு வேலைகளையும் குடும்பத்தின் பாரத்தையும் தலையில் சுமக்க தொடங்கி இருக்கிறார். இந்த நிலையில் இந்த சீரியலில் மீனாவாக மனதில் பதிந்து இருக்கும் நடிகையின் பெயர் கோமதி பிரியா என்பது பலருக்கும் தெரியாது.


கோமதி பிரியா 1993 ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி பிறந்திருக்கிறார். மேலும் இவருக்கு சொந்த ஊரு மதுரை தானாம். வேலைக்காக சென்னைக்கு வந்திருக்கிறார். 30 வயசாகும் இவர் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்திருக்கிறார். அதுவும் பல ரீல்ஸ் வீடியோக்களை இவர் அடிக்கடி வெளியிட்டு வர அது இவரை பிரபலம் ஆக்கி இருக்கிறது. அது மூலமாகத்தான் இவருக்கு சின்ன திரையில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.


அத்தோடு 2018 ஆம் ஆண்டில் இருந்து சீரியலில் நடிக்கும் இவர் ஓவியா என்ற சீரியல் மூலமாகத்தான் சின்ன திரையில் அடி எடுத்து வைத்திருக்கிறார். அதற்குப் பின்னர்  வேலைக்காரன் என்னும் சீரியலிலும் நடித்திருக்கிறார். 


சின்னத்திரையில் மட்டுமல்லாமல் தனியா ஒரு youtube சேனல் நடத்தி இவரும் தன்னுடைய வீடியோஸ்களை அதில் அடிக்கடி அப்லோடு செய்து வருகிறார். இந்த நிலையில் தற்போது சின்ன திரையில் அதிகமான ரசிகர்களால் பாராட்டப்படும் நாயகியாக இவரும் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறார்.

Advertisement

Advertisement