• Jan 19 2025

ஓனரானதும் லேபர்களின் சாபம் வாங்கிய மனோஜ்.. விஜயாவுக்கு வார்னிங் கொடுத்த பாட்டி

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மனோஜின் கடை திறப்பு விழாவில் விஜயா ரிபனை கட் பண்ணி கடையை திறக்கச் சொல்ல, முக்கியமான ஒரு ஆள் வரணும் என்று வெயிட் பண்ணுகிறார். அதன்பிறகு ஸ்ருதியின் அம்மா வர ஓடிச்சென்று அவரை வரவேற்று அதன் பிறகு ரிப்பனை வெட்டி கடையை திறக்கின்றார். இதன் போது உங்க வீட்டிலிருந்து யாரும் வரலையா என்று  அண்ணாமலை மீனாவிடம் கேட்க, அவங்க வராதது நல்லது தான். அவங்க வந்திருந்தால் பார்த்து பொறாமை படுவாங்க என்று சொல்ல, அவங்க வந்தா அசிங்கப்படுவாங்க, அதனால தான் நான் கூப்பிடலை என்று மீனா சொல்லுகிறார்.

முத்து மீனாவை அழைத்துக் கொண்டு மிக்ஸி பார்த்து எடுத்துக் கொள்கிறார். அதே நேரம் ஸ்ருதியின் அம்மா ஒன்றரை லட்சம் மதிப்புள்ள ஏசி ஒன்றை வாங்குகிறார். மீனா பில் போட செல்லும் போது விஜயா தடுத்து நிறுத்தி, எங்க போற ஸ்ருதி அம்மா ஒன்றரை லட்சத்துக்கு ஏசி வாங்கி இருக்காங்க அவங்களுக்கு தான் முதல் பில் என்று சொல்லி தடுக்கின்றார். மனோஜும் தள்ளுங்க ஆண்டிக்கு தான் முதல் பில் என்று சொல்லி அவருக்கு பில்லை  போட்டுக் கொடுத்ததும் பாட்டி மீனாவை கூட்டி வந்து பில் போட சொல்லுகிறார்.


மேலும் விஜயாவை கூப்பிட்டு எதற்கு மீனாவை அவமானப்படுத்துற மாதிரி பேசுற என திட்டுகிறார். அவ கைராசி காரி. அவளை பத்தி பேசினா நான் சப்போட்டா வந்து நிப்பேன் என விஜயாவை வெளுத்து வாங்குகிறார்.

இதைத்தொடர்ந்து மனோஜ் கடையில் வேலை செய்த பழைய லேபர்சை வரச்சொல்லி உங்களுக்கு இனி இங்க வேலை இல்லை என துரத்தி விடுகிறார். அவர்கள் பிரச்சினை செய்யவும்  எனக்கு புது ரத்தம் தான்வேணும் என்று புது இளைஞர்களை வேலைக்கு அமர்த்தி அவர்களை விரட்டுகிறார். இதை பார்த்த பழைய லேபர்கள் ஒரு முதலாளி எப்படி இருக்கணும்னு தெரியல இவர் நல்ல அனுபவிக்க போறார் என்று சாபம் விடுகின்றார்கள் . மனோஜின் நடவடிக்கையை பார்த்து ரோகினி பாராட்டுகிறார்.

இறுதியாக மனோஜ் ரோகினி வீட்டுக்கு வர மனோஜ் ரொம்ப டயர்டா இருக்கு என்று சொல்ல, கொஞ்சம் நில்லு, ஊர் கண்ணே உங்க மேல தான் என்று ஆர்த்தி கரைச்சு எடுத்துட்டு வரேன் என விஜயா உள்ளே போகிறார் இதை பார்த்து மனோஜம் ரோகிணியும் சந்தோஷப்படுகிறார்கள் இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement