• Jan 19 2025

இளையராஜாவுக்கு நோஸ்கட் செய்த மஞ்சுமல் பாய்ஸ்! நோட்டிஸிக்கு தயாரிப்பாளர் கொடுத்த விளக்கம் !

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

மலையாள திரையுலகில் உருவாகி மாபெரும் வெற்றி நடை போடும் திரைப்படம் "மஞ்சுமல் பாய்ஸ்" . மலையாளத்தில் 200 கோடி வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.  கமல்காசன் நடித்து வெளியாகிய "குணா" திரைப்படத்தில் முக்கிய காட்சியில் காட்டப்படும் "டெவில்ஸ் கிட்சன்" என்ற குகையை மையமாக கொண்டே இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது


இவ்வாறு இருக்கும் இந்த படத்தில் இளையராஜா இசையில் வந்த "கண்மணி அன்போடு காதலன்" என்ற பாடல் பயன்படுத்தப்பட்டிருந்தது. தனது பாடல்களுக்கு உரிமம் பெற்று வைத்திருக்கும் இளையராஜா குறித்த பாடலை பயன்படுத்தியதற்காக அபராதமும் தந்து படத்தில் இருந்து பாடலை நீக்கவும் வேண்டும் என மஞ்சுமல் பாய்ஸ் தயாரிப்பாளருக்கு நோட்டிஸ் அனுப்பி இருந்தார்.


இவ்வாறு இது சர்ச்சையை ஏற்றப்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து மஞ்சுமல் பாய்ஸ் தயாரிப்பாளரிடம் கேட்டபோது  " பாடலுக்கான உரிமைகளைப் பெற்றே பயன்படுத்தியதாகவும் இளையராஜாவின் நோட்டீஸ் கிடைக்கப் பெறவில்லை எனவும் மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர் விளக்கம் கொடுத்துள்ளார்" 

Advertisement

Advertisement