• Aug 25 2025

விஜயாவுக்கு எதிராக நிற்கும் குடும்பம்.. இருக்கிறதை விட்டுட்டு பறக்க ஆசைப்படும் மனோஜ்.!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, அண்ணாமலை விஜயாவை பார்த்து மாமியார் என்றவங்க மருமகளை அதிகாரம் பண்ணுறது இல்ல இன்னொரு அம்மா மாதிரி பொறுமையா நடந்துக்கனும் அப்புடி எப்பயாவது நடந்திருக்கியா என்று கேட்கிறார். அதுக்கு விஜயா நான் இவள பொண்ணு மாதிரி தான் பார்த்தனான் என்று சொல்லுறார். அதைக் கேட்ட முத்து அப்பா அது மருமகளா பாசம் வரல மலேசியா பணக்கார மருமகளுக்கு கிடைச்ச மரியாதை என்று சொல்லுறார். 


இதனை அடுத்து அண்ணாமலை இப்ப நடந்த அவமானத்துக்கு முழு காரணம் நீ தான் என்று சொல்லுறார். பின் அண்ணாமலை அண்டைக்கே முத்துவும் மீனாவும் சொன்னாங்க அந்த பசங்கள கவனிக்க சொல்லி நீ அண்டைக்கு அதை பார்த்திருந்தால் இப்ப இப்புடி எல்லாம் பிரச்சனை வந்திருக்காது என்கிறார். அதைக் கேட்ட ஸ்ருதி மீனா சொல்லுறதை எல்லாம் கேட்கணுமா என்று கொஞ்சம் ஈகோ ஆன்ட்டிக்கு என்று சொல்லுறார். 

இப்படியே கொஞ்ச நேரம் எல்லாரும் விஜயா பண்ணது தான் தப்பு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இதனை அடுத்து இரவு முழுக்க விஜயா அண்ணாமலை பேசினதை நினைத்துப் பார்த்து நித்திர கொள்ளாமல் இருக்கிறார். அதைப் பார்த்த அண்ணாமலை ஏன் நித்திர கொள்ளாமல் இருக்கிற என்று கேட்கிறார். அதுக்கு விஜயா என்னை எல்லாருக்கும் முன்னால அவமானப்படுத்திட்டீங்க என்கிறார். 


மறுநாள் காலையில மனோஜின்ட ஷோரூமுக்கு நிறைய பேர் offer-ல பொருள் வாங்க வந்துநிக்கிறார்கள். அதைப் பார்த்த மனோஜ் சந்தோசப்படுறார். பின் விஜயா கோவிலில வைச்சு பார்வதி கிட்ட நான் இனி ஜோகா சொல்லிக் கொடுக்கப் போறேன் என்கிறார். அந்த நேரம் பார்த்து பார்வதியோட friend அங்க போறார். அவரை பார்த்த உடனே பார்வதி இவங்க சோசியல் சேர்விஸ் பண்ணுறவங்களுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கிறவங்க என்று விஜயாவுக்கு சொல்லுறார். அதைக் கேட்டவுடனே விஜயா எனக்கும் அந்த பட்டம் வேணும் என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement