மலையாள சினிமாவில் கடந்த வருடம் வெளியாகி, மிகப்பெரிய ஹிட் கொடுத்த படம் தான் மஞ்சுமெல் பாய்ஸ். இந்த படம் கேரளாவை தாண்டி தமிழில் தான் மிகப் பெரிய ஹிட் கொடுத்தது. அதற்கு காரணம் இந்த படத்தில் குணா பட பாடல் இடம் பெற்றுள்ளதோடு கொடைக்கானலை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டது தான்.
சமீப காலமாகவே மலையாள திரைப்படங்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகின்றது. அதிலும் தமிழ் ரசிகர்கள் தமிழ் படங்களை விட மலையாள படங்களை தான் அதிகமாக கொண்டாடி வருகின்றனர்.
அதன்படி மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தில் சௌபின், ஸ்ரீநாத் பாஷி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த படத்தை சிதம்பரம் இயக்கி இருந்தார். உண்மையான சம்பவத்தை மையமாக வைத்தே இந்த படம் எடுக்கப்பட்டது. இதுவே இந்த படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

இந்த நிலையில், மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் கேரளா அரசின் மாநில திரைப்பட விருதுகளில் ஒன்பது பிரிவுகளில் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிதம்பரம் இயக்கத்தில் வெளியான இந்த படம், உலக அளவில் 225 கோடி வசூலித்து சாதனை படைத்தது. சிறந்த திரைப்படம், இயக்குநர், திரைக்கதை உள்ளிட்ட முக்கிய விருதுகளை இந்த படம் தற்போது பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!