• Nov 05 2025

வியானாவுக்கு பெருகும் மக்கள் ஆதரவு.! டேஞ்சர் சோனில் சிக்கிய காதல் மன்னன்

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி  தற்போது ஒரு மாதத்தை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டு உள்ளது.  இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 20 போட்டியாளர்கள் பங்கு பற்றினர்.  இதில் முதல்  நான்கு வாரங்களில் இடம்பெற்ற எலிமினேஷனில் பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன் ஆகியோர் எலிமினேட் ஆகினர். 

இதைத் தொடர்ந்து  அதற்கு பதிலாக நான்கு வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே அனுப்பினார்  விஜய் சேதுபதி. அவர்கள் உள்ளே வந்ததும்  ஏற்கனவே இருந்த போட்டியாளர்களின் முகத்திரையை  கிழித்தனர். இதனால் ஆட்டம் சற்று சூடு பிடிக்க தொடங்கியது. 

பிக் பாஸ் வரலாற்றில் முதன்முறையாக ஒரு ஜோடியை வைல்ட் கார்ட் போட்டியாளராக உள்ளே அனுப்பி உள்ளனர்.  அவர்கள்  விஜய் டிவி பிரபலங்களான பிரஜின் மற்றும் சாண்ட்ரா தான். அவர்கள் இருவரும் சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமானவர்கள்.  இவர்களுக்கு இரட்டைப் பெண் குழந்தையும் உண்டு. 


இந்த நிலையில்  பிக் பாஸ் சீசன் 9_ கான  காலை நேர வோட்டிங் முடிவுகள் வெளியாகி உள்ளன.  அதன்படி அதில்  யாரும் எதிர்பார்க்காத வகையில் வியானா  மக்களின் ஆதரவை பெற்று முன்னேறியுள்ளார். 

மேலும், கானா வினோத் முதல் நிலையிலும், இரண்டாவதாக வியானா,   மூன்றாவதாக  கம்ரூதினும் காணப்படுகின்றனர்.  அதன் பின்பு விக்ரம், பார்வதி, சபரி, பிரவீன் ஆகியோரும் டேஞ்சர் சோனில் கெமி, எப் ஜே, ரம்யா, துஷார் ஆகியோரும் காணப்படுகின்றனர். 

எனவே இந்த வாரம் கெமி, எப் ஜே, ரம்யா, துஷார் ஆகியோர்  குறைவான வாக்குகளை பெற்ற நிலையில்  இவர்கள் மக்களால் காப்பாற்றப்படுவார்களா? இல்லை  வெளியே அனுப்பப்படுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

Advertisement

Advertisement