• Jan 19 2025

ஊதா கலரு பாவாடை தாவணியில் மயக்கும் மடோனா செபாஸ்டியன்! க்யூட் போட்டோஸ்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

கேரளாவில் பிறந்த நடிகை தான் மடோனா செபாஸ்டியன். இவர் பெங்களூரில் தனது படிப்பை முடித்து அதன் பிறகு மாடலிங் துறையில் களமிறங்கினார். தற்போது தமிழில் மட்டும் இல்லாமல் மலையாள மொழியிலும் அதிக படங்களில் நடித்து வருகின்றார்.

2015 ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான கலைஞர்களில் மடோனா செபாஸ்டினும் ஒருவர். அதன் பின்பு தமிழில் காதலும் கடந்து போகும் என்ற படத்தில் முதன்முதலாக நடித்தார். தொடர்ச்சியாக  கவன், பா. பாண்டி, ஜிங்கா, வானம் கொட்டும் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

அவ்வப்போது தெலுங்கு, கன்னட மொழியிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இறுதியாக தமிழில் வெளியான லியோ திரைப்படத்தில் விஜயின் தங்கையாக நடித்திருந்தார். இந்த படம் இவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்தது.


சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் மடோனா செபாஸ்டின், அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சிகரமான போட்டோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றார்.

இந்த நிலையில், தற்போது ஊதா கலர் பாவாடை தாவணியில் பார்ப்பதற்கு ராதையாகவே தோற்றமளிக்கின்றார் மடோனா செபாஸ்டின். இதனைப் பார்த்த ரசிகர்கள் அவரது அழகில் மயங்கி கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.

Advertisement

Advertisement