• Jan 19 2025

லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் டெஸ்ட் பண்ண வேண்டும்- உயர் நீதிமன்றத்தில் பரபரப்பு புகார்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் ரசிகர்களின் பேவரிட் இயக்குநராக இருப்பவர் தான் லோகேஷ் கனகராஜ்.மாநாகரம் என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகினார். தொடர்ந்து கைதி,மாஸ்டர்,விக்ரம்,லியோ போன்ற திரைப்படங்களை இயக்கி இருந்தார். அடுத்ததாக ரஜினிகாந்தை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார்.

இந்நிலையில் தான் இயக்குநர் லோகேஷ் கனகராஜூக்கு எதிராக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பரபரப்பான மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதாவது மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்நத ராஜா முருகன் என்பவர் மதுரை உயர்நீதின்ற கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது, 


லியோ படத்தில் அதிகமாக வன்முறை காட்சிகள் இருக்கின்றது.எனவே அவருக்கு உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும்.வன்முறை போதைப் பொருள் மூலம் சமூகத்திற்கு தவறான வழிகாட்டுதல்களை காண்பிக்கின்றார் என்றும் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் தான் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.


Advertisement

Advertisement