• Jan 19 2025

விஜயகாந்தைப் பார்க்க விஜய் கேட்கவே இல்லையா?- நடந்தவற்றையெல்லாம் ஓபனாகப் பேசிய மேனேஜர்

stella / 1 year ago

Advertisement

Listen News!


மறைந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உடல், சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது. அங்கு அஞ்சலி செலுத்துவதற்காக, தினமும் அவரது ரசிகர்களும், கட்சியினரும் வருகின்றனர்.

அவருடைய இறுதிச் சடங்கில் அவரை கடைசியாக காண பல லட்சக் கணக்கில் மக்கள் கூட்டம் கூடியதும் எல்லோராலும் காணக் கூடியதாக இருந்தது.தற்போது அவரை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மக்களின் அஞ்சலிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் நடிகர் விஜய் இன்று இந்த உயரத்தில் இருக்க விஜயகாந்த்தும் ஒரு காரணம் அது எல்லோருக்கும் தெரியும்.ஆனால், விஜய் கடைசி வரை விஜயகாந்த் உடல்நலம் முடியாமல் இருக்கும் போதும் பார்க்க வரவில்லை என ஒரு கோபம் ரசிகர்களிடம் இருந்தது.


ஆனால், விஜய் கேட்டும் அவர்கள் குடும்பம் அனுமதிக்கவில்லை என்றும் கூறுகின்றனர். இதை விஜயகாந்த் அவர்களுடைய மேனஜேர் கடுமையாக எதிர்த்துள்ளார், எல்லோருக்கும் அனுமதி கொடுக்கப்பட்டது.விஜய் கேட்டும் கொடுக்காமல் இருக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement