• Feb 23 2025

’லால் சலாம்’ படத்தை பிளாப் ஆக்க திட்டம் போட்ட விநியோகிஸ்தர் ஒரு விஜய் ரசிகரா? பரபரப்பு தகவல்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’லால் சலாம்’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இறுதிக்கட்ட புரொமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் லால் சலாம் திரைப்படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்ற விஜய் ரசிகர் ஒருவர் ரஜினி ரசிகர்களிடம் தவறாக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
அமெரிக்காவில் ’லால் சலாம்’  திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் விவரங்களை வெளியிடுமாறு ரசிகர்கள் அவரிடம் சமூக வலைதளங்கள் மூலம் கேட்டனர். ஆனால் அதற்கு அவர், ‘ரஜினி கேமியோ பாத்திரத்தில் நடிக்க வில்லை என்றால் இந்த படம் அமெரிக்காவில் 50 இடங்களில் கூட ரிலீஸ் ஆகி இருக்காது என்றும் நீங்கள் எல்லாம் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் எனக்கு புரியவில்லை என்றும் தெனாவட்டாக பதில் அளித்ததாக தெரிகிறது.



வருண் என்ற அந்த நபர் தனது சமூக வலைத்தளத்தில் விஜய்யின் கவர் போட்டோ வைத்திருக்கும் நிலையில் அவர் தீவிர விஜய் ரசிகர் என்பது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் ’லால் சலாம்’ ரிலீஸ் உரிமையை பெற்ற அவர் வேண்டுமென்று ரஜினி ரசிகர்களுக்கு தியேட்டர் குறித்த தகவல்களை கூறாமல் தெனாவட்டாக பதில் கூறியதை அடுத்து ரஜினி ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

விஜய்யின் ‘லியோ’ படத்தின் வசூலை ரஜினியின் ’லால் சலாம்’ பட வசூல் முந்தி விடக் கூடாது என்ற காழ்ப்புணர்ச்சியால் வருண் செயல்படுகிறார் என்றும் இந்த அளவுக்கு காழ்ப்புணர்ச்சியுடன் இருக்கும் இவர் எதற்காக ’லால் சலாம்’ படத்தின் ரிலீஸ் உரிமையை வாங்க வேண்டும் என்றும் அவரை ரசிகர்கள் வறுத்தெடுத்தனர். இந்த நிலையில் ஒரு கட்டத்தில் வருண் சர்ச்சைக்குரிய பதிவை நீக்கி விட்டதாக தெரிகிறது.


Advertisement

Advertisement