• Feb 22 2025

பிக் பாஸ் ஷிவின் நடிப்பில் புதிய திரைப்படம்... அந்த ரோல்ல நடிக்க இயக்குனர் தான் கன்வின்ஸ் பண்ணாரு...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ஷிவின் கணேசன். அவர் அந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் அதிக வாக்குகளாலும், தனது திறமையாலும் 2 ரன்னர்அப் ஆனார். ஆனால் அவர் ஒரு திருநங்கை. இந்நிலையில் தற்போது இவர் புதிய திரைப்படத்தில் நடைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.   


நடிகை கயல் ஆனந்தி நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படமான 'மங்கை', பெண்மை மற்றும் சமூக பாலின விதிமுறைகளை ஆராய்கிறது. குபேந்திரன் காமாட்சி இயக்கிய இத்திரைப்படம், கதாநாயகி மூணாறிலிருந்து சென்னை வரையிலான பயணத்தைத் தொடர்ந்து, ஆழமான வேரூன்றிய பாலினச் சார்புகளுக்கு எதிரான அவரது போராட்டங்களைச் சித்தரிக்கும் கதையைக் கொண்டுள்ளது மங்கை திரைப்படம்.


இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீசான நிலையில் ஷிவின் இந்த திரைப்படத்தில் நடித்திருப்பது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது. இந்நிலையில் அவரும் ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்வில் கலந்து கொண்ட பொது இவ்வாறு கூறியிருந்தார்.


"பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதலாவது ரிலீஸ் ஆகுற திரைப்படம் இதில் நானும் ஒரு பார்டா நடிச்சி இருக்கது சந்தோசமா இருக்கு. இயக்குநர் கதை சொல்லும் போது எனக்கு அந்த ரோல் பன்னுறதுக்கு ஒரே குழப்பமா இருந்துச்சி, நான் நடிக்கலாமா எப்படி அந்த இடத்துல இருந்துட்டு செய்றது அப்படி எல்லாம் யோசிச்சன் ஆனா இயக்குனர் என்ன கன்வின்ஸ் பண்ணி ஒத்துக்க வச்சாரு. பிறகு தான் நான் ஓகே சொல்லி நடிச்சி இருக்கேன்". 


"கயல் ஆனத்தி எல்லாம் டக்குனு டேக் சொல்லிட்டா ஒடனே நடிக்க ஆரம்பிச்சிருவாங்க நான் மட்டும் அப்டியே யோசிச்சிட்டு இருப்பன். ஆனா இந்த படத்தில் கொஞ்ச நாள் நடிச்சாலும் ரொம்ப ஒரு நல்ல பிஸியான ஷூட்டில் இருந்தோம் என்று நினைக்கும் போது நான் ஹாப்பி தான் நல்ல படம் எல்லோரும் கட்டாயம் பாருங்க" என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement