• Oct 12 2025

மீனாவை நினைத்து கதறி அழும் கோமதி.. ராஜியை பிறந்த வீட்டோடு இணைக்க பிளான் பண்ணும் குமார்.!

subiththira / 14 hours ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, மீனா கோமதியைப் பார்த்து நீங்களாவது கொஞ்ச நேரம் எங்க கூட இருந்திட்டு போங்க என்கிறார். அதைக் கேட்ட உடனே கோமதி அழுகிறார். மேலும் நினைச்ச நேரத்தில எல்லாம் உங்களைப்  பார்க்க முடியாது என்று கவலைப்படுறார் கோமதி. அதைக் கேட்ட மீனா உங்க மகன் திமிர் பிடிச்சு செய்த வேலையால நானும் தான் கஷ்டப்படுறேன் என்கிறார்.


பின் செந்தில் மீனாவைப் பார்த்து புரிஞ்சிக்காமல் பேசாத என்கிறார். அதனை அடுத்து மீனா நான் அடிக்கடி அங்க வந்து உங்க எல்லாரையும் பார்ப்பேன் என்று கோமதிக்கு சொல்லி அழுகிறார். அப்புடியே எல்லாரும் அழுது கொண்டே அங்கிருந்து கிளம்புறார்கள்.

பின் செந்திலோட அக்கா செந்திலை கூப்பிட்டு அப்பா உனக்கும் கதிருக்கும் காசு கொடுத்திருக்கார். அப்ப எனக்கு அதில பங்கு எதுவும் இல்லையா என்று கேட்கிறார். அதுக்கு செந்தில் உன்னோட கல்யாணத்துக்கு அப்பா நகை எல்லாம் போட்டாரே அப்ப நாங்க பங்கு கேட்டோமா என்கிறார். அதனை அடுத்து குமார் கதிரோட ட்ராவெல்ஸிற்குப் போய் ராஜியைப் பார்த்து அப்பத்தாவுக்கு பிறந்த நாள் வருது என்கிறார். 


மேலும் அப்பத்தா நம்ம இரண்டு குடும்பமும் சேரனும் என்று நினைக்கிறாங்க... அதுக்கு நீயும் அத்தையும் வரமுடியுமா.? என்று கேட்கிறார். பின் குமார் உன்ன கட்டாயப்படுத்தல வரமுடியுமா என்று பாரு என்கிறார். அதனை அடுத்து கோமதி மீனா விருப்பம் இல்லாமல் போனவள் அதுதான் ஒரு மாதிரி இருக்கு என்று பாண்டியன் கிட்ட சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement