சமூக வலைத்தளங்களில் நடிகை பிரியங்கா மோகன் தொடர்புடையதாக பரவி வரும் கவர்ச்சி மற்றும் அவதூறு படங்கள் குறித்து தற்போது அவர் வெளியிட்டுள்ள விளக்கம், திரையுலகத்திலும் ரசிகர்களிடையும் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
தொடர்ச்சியாக இணையத்தில் பரவும் தவறான தகவல்களும், AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட போலி படங்களும் சமூகத்தில் பரவி வரும் நிலையில், பிரியங்கா மேனன் இதற்கு நேரடியாக எதிர்வினை அளித்துள்ளார்.
பிரியங்கா மோகன் வெளியிட்ட விளக்கத்தில், வெளிவந்த புகைப்படங்கள் அனைத்தும் AI தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டவை எனத் தெளிவாக தெரிவித்திருக்கிறார்.
மேலும், "போலி படங்களை பகிர்வதையும், பரப்புவதையும் தயவு செய்து நிறுத்துங்கள்... என்னை தவறாக காட்டும், AI மூலம் உருவாக்கப்பட்ட போலி படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. AI தொழில்நுட்பம் படைப்பாற்றல் நிறைந்த பயன்பாட்டிற்காக மட்டுமே இருக்க வேண்டும்..." என்கிறார் பிரியங்கா.
இந்த பதிவிற்கு ரசிகர்கள் மற்றும் பல பிரபலங்களிடமிருந்து ஆதரவான கருத்துகள் குவிந்து கொண்டிருக்கின்றன. அத்துடன் இது பலருக்கும் எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளது. இணையதளத்தில் எந்தவொரு தகவலாக இருந்தாலும், அது உண்மையா, போலியா என்பதைச் சரிபார்க்கும் பொறுப்பு இருக்கிறது என்பதை இந்த பதிவு மீண்டும் ஒரு முறை நினைவூட்டுகிறது.
Listen News!