பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, சக்திவேலோட அம்மா பாண்டியன் குடும்பமும் இந்தக் குடும்பமும் ஒன்னா சந்தோசமா இருக்கணும் என்கிறார். அதுக்கு சக்திவேல் சத்தியமா இது மட்டும் நடக்காது என்கிறார். அதைக் கேட்ட உடனே பாட்டி அப்ப இந்தப் பிறந்த நாளும் நடக்கவே நடக்காது என்று சொல்லுறார். மேலும் எல்லாரும் ஒன்னா சேர்ந்து செய்தால் தான் நான் பிறந்தநாள் கொண்டாட சம்மதிப்பேன் அப்படி இல்ல என்றால் நான் எதுக்குமே சம்மதிக்க மாட்டேன் என்று சொல்லிட்டு அங்கிருந்து கிளம்புறார்.

அதனை அடுத்து சக்திவேல் வெற்றி வேலைப் பார்த்து நாம என்னதான் அம்மாவுக்கு பார்த்துப் பார்த்து செய்தாலும் அம்மாவோட பாசம் முழுக்க கோமதி மேல தான் இருக்கு என்கிறார். மறுபக்கம் மீனா கிட்ட செந்தில் பால் தரச் சொல்ல மீனா பால் ஒன்னும் இல்ல என்கிறார். அதுக்கு செந்தில் அம்மாவெல்லாம் இப்புடி ஒருநாள் கூட சொன்னதில்ல என்றவுடனே மீனா அப்ப எதுக்காக தனியா வந்தனீங்க அங்கேயே இருந்திருக்கலாம் என்கிறார்.
பின் செந்தில் 42000க்கு மேசை வாங்கினதைக் கேட்ட மீனா சமைக்கிறதுக்கு எதுவும் இல்ல இப்ப இது முக்கியமா? என்று கோபப்படுறார். அதனைத் தொடர்ந்து குமார் கோமதியை ரோட்டில பார்த்து கதைக்க முயற்சி பண்ணிக் கொண்டிருக்கிறார். அதைப் பார்த்த கோமதி இவன் எதுக்காக என்னோட கதைக்க முயற்சி பண்ணுறான் என்று சொல்லிட்டு அங்கிருந்து கிளம்புறார். பின் குமார் தான் திருந்திட்டேன் என்று சொல்லுறார்.

அதைப் பார்த்த சரவணன் குமார் கோமதி கிட்ட பிரச்சனை பண்ணுறார் என்று நினைத்து கோபப்படுறார். பின் சரவணன் குமார் கிட்ட வந்து அடிக்க கை ஓங்குறார். அதனை அடுத்து சரவணன் கோமதியை வண்டியில ஏற சொல்லுறார். பின் பாண்டியன் கிட்ட மயில் நம்ம கடையை கொஞ்சம் பெருசாக்கணும் என்று யோசனை சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!