தமிழ் சினிமாவில் வரலாற்று மற்றும் அதிரடி கதைக்களங்களை மையமாகக் கொண்ட திரைப்படங்களுக்கு எப்போதும் ஒரு தனி வரவேற்புள்ளது.
அந்த வரிசையில் இணைகிறது புதிய திரைப்படமான ‘கிங்டம்’.
ஜெர்ஸி பட இயக்குநர் கௌதம் தின்னூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா அவரது 12வது படமாக நடித்துள்ள படம் 'கிங்டம்' . இதில் கதாநாயகியாக பாக்யஸ்ரீ ப்ரோஸ் நடித்துள்ளார்.
சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
புலம்பெயர்ந்த அரசியல் சிக்கல்கள், வீரம், தியாகம், சதி, சக்தி என பல அம்சங்களை கொண்ட ஒரு வலிமையான திரைக்கதையை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்படுகிறது.
இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் எதிர்வரும் 26ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சமீபத்தில் வெளியான ‘கிங்டம்’ படத்தின் போஸ்டர்கள் மற்றும் கேரக்டர் லுக்குகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, தற்போது ட்ரெய்லருக்கும் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!