• Mar 08 2026

தனது திருமணத்தை ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடிய நடிகை ராஷ்மிகாவின் வைரல் கிளிக்ஸ்

Aathira / 5 days ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நட்சத்திரங்களாக திகழும் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் திருமணம் பற்றிய தகவல்கள், புகைப்படங்கள்தான் இணையத்தை கவர்ந்து வருகின்றன.

இந்த நிலையில், பிப்ரவரி 24ஆம் தேதி நடைபெற்ற சங்கீத் விழாவின் மறக்க முடியாத நினைவுகளையும் உணர்ச்சிபூர்வமான புகைப்படங்களையும் பகிர்ந்து உள்ளார் ராஷ்மிகா மந்தனா.

மேலும், அன்று இரவு காதல், மகிழ்ச்சி கண்ணீர், சிரிப்பு, இசை, பாடல்கள் மற்றும் அழகான அலங்காரங்கள் என கொண்டாட்டக் களமாக அமைந்ததாகவும், அன்று இரவு ஒருவருக்கொருவர் சர்ப்ரைஸ் கொடுக்கத் திட்டமிட்டு இருந்ததாகவும், ஆனால் குடும்பத்தினர் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.


அத்துடன், குடும்பத்தார் தங்களுடன் இணைந்து நடனம் ஆடிய தருணம் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

திருமணத்தின் போது அவர் அணிந்த அழகிய ஆடை அலங்காரங்கள், ஆபரணங்கள் அனைவரின் கவனத்தை ஈர்த்தது. அவை கனமாக இருந்தாலும், அதனை உற்சாகமாகக் கொண்டாடியதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், “நாங்கள் இருவரும் ஒன்றாக நடனமாடிய அந்த இரவு எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்” என ராஷ்மிகா வெளியிட்ட புகைப்படத்தில் குறிப்பிட்டுள்ளார். 

தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதோடு, அவர்களுடைய இல்லற வாழ்வு சிறக்க பலரும் தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement