• May 05 2026

சூர்யா, ராகவா லாரன்ஸ் பாணியைப் பின்பற்றும் விஜய் தேவரகொண்டா.! வெளியான சுவாரஸ்யமான தகவல்கள்

shali / 2 months ago

Advertisement

Listen News!

தெலுங்கானா மாநிலத்தின் மஹ்பூப் நகர் மாவட்டத்தில் உள்ள அச்சம்பேட்டைக்கு அருகிலுள்ள தும்மல் பேட்டா கிராமமே நடிகர் விஜய் தேவரகொண்டாவின் மூதாதையர் ஊராகும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது உறவுகளைத் தேடி கிராமத்திற்கு வந்த விஜய் தேவரகொண்டாவை, கிராம மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

கிராம மக்கள் முன்னிலையில் உரையாற்றிய விஜய் தேவரகொண்டா, “என் கிராமத்திற்கு வந்து, இங்கு இருக்கும் அனைவரையும் நேரில் பார்ப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது எனக்கு ஒரு உணர்ச்சி மிகுந்த தருணம். இனிமேல் எங்கள் குடும்பம் தொடர்ந்து இந்த கிராமத்திற்கு வர முயற்சி செய்யும்,” என்று கூறினார். 


சினிமா உலகில் பிஸியாக இருந்தாலும், தன்னுடைய சொந்த ஊரை மறக்காதவர் என்பதைக் காட்டும் விதமாக இந்த விஜயம் அமைந்தது. 

மேலும், இந்த ஆண்டு முதல், அச்சம்பேட்டை தொகுதியில் உள்ள 44 அரசுப் பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேவரகொண்டா அறக்கட்டளை மூலம் உதவித்தொகை வழங்க உள்ளதாகவும் கூறியுள்ளார். 

இந்த அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகியுள்ளது. ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் விஜய் தேவரகொண்டாவின் சமூகப் பொறுப்புணர்வை பாராட்டி வருகின்றனர்.

Advertisement

Advertisement