• Mar 08 2026

மாஸ் ஹீரோவின் சூப்பரான கம்பேக்.! வெளியானது "டாக்ஸிக்" படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்.!

shali / 6 days ago

Advertisement

Listen News!

கன்னட சினிமாவின் முன்னணி நட்சத்திரமான யாஷ் தற்போது இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் ‘Toxic’ என்ற படத்தில் நடித்துள்ளார். கேவிஎன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம், கேங்ஸ்டர் ட்ராமா கதைக்களத்தில் உருவாகி வருவதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.


‘டாக்ஸிக்’ திரைப்படத்தில் யாஷுடன் இணைந்து பல முன்னணி நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நயன்தாரா, ருக்மணி வசந்த், கியாரா அத்வானி, ஹுமா குரேஷி உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் தோன்றுகின்றனர். பல மொழி ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இந்த நட்சத்திர படம் அமைந்துள்ளது.

யாஷ் ‘KGF’ படத்துக்குப் பிறகு தேர்வு செய்துள்ள இந்தப் படம், அவரது கேரியரில் மிக முக்கியமான படமாகக் கருதப்படுகிறது. மாஸ் மற்றும் ஸ்டைலான கேரக்டரில் அவர் மீண்டும் ரசிகர்களை கவரவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.

படம் வரும் மார்ச் 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. பல மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகும் இந்தப் படம், பான்-இந்தியா அளவில் பெரிய வசூலை நோக்கி இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ‘டாக்ஸிக்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘தபாஹி’ தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே யூடியூபில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement