• May 05 2026

யார் யாரோ விஜய் சாருக்கு அட்வைஸ் பண்ணுறத பார்க்க சிரிப்பு வருது.. ஷாம் அதிரடிக் கருத்து.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் நடிகர் விஜய் மற்றும் அவரைச் சுற்றியுள்ள விவாதங்கள் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில், தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் ஷாம் விஜய் குறித்து தெரிவித்துள்ள கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

ஷாம், சமீபத்திய பேட்டி ஒன்றில், விஜயைச் சுற்றியுள்ள விவகாரங்களையும், திரைப்பட உலகில் சந்தித்த சவால்களையும் பற்றி தமது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார். 


அவர் அதன்போது, "யார் யாரோ விஜய் சாருக்கு அட்வைஸ் பண்ணிட்டு இருக்கிறத பார்த்தால் எனக்கு காமெடியா இருக்கும். டேய் உங்களுக்கு தெரியாது அவரைப் பற்றி, விஜய் அண்ணா முன்னாடி ஒருத்தர் நிக்க முடியாது. நாளைய தீர்ப்பு படத்திலிருந்து இப்ப வரைக்கும் அவர் அவ்ளோ பிரச்சனையை சந்திச்சு இருப்பாரு. எவ்ளோ பேர பாத்து இருப்பாரு.

எவ்ளோ பேரை கையாண்டு இருப்பாரு. எவ்ளோ மன தைரியம் இருந்தா சினிமா வேணாம் என்று சொல்லிட்டு அரசியல் வந்து இருக்காரு. இதை கூட ஜோசிக்காம அவர் மேல குற்றச்சாட்டு வைக்கிறீங்க அப்போ, நீ அவ்ளோ மோசமா இருக்கீங்க பாரு." என்று தெரிவித்துள்ளார். 

இந்த கருத்துக்கள் வெளியாகியதுடன், ரசிகர்கள் மற்றும் சமூக வலைத்தளப் பயனர்கள் இவற்றை பரபரப்பாக பகிர்ந்து வருகின்றனர்.

ஷாமின் இந்த பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக விஜயைச் சுற்றியுள்ள ரசிகர்கள், இவர் குறித்து வெளியிடும் கருத்துக்களை தீவிரமாகப் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement

Advertisement