• May 05 2026

வீட்டை விட்டு வெளியேறிய மீனா.. சிந்தாமணி போட்டுடைத்த உண்மை.! அதிர்ச்சியில் ரோகிணி

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், ஹாஸ்பிடலில் இருக்கும் விஜயா, அண்ணாமலைக்கு இப்படி நடக்க முழு காரணமும் மீனாதான், அவருடைய உயிரை எடுக்க வந்த எமன் மீனாதான் என கண்டபடி திட்டுகின்றார். இதனால் மீனா அங்கிருந்து வெளியே வந்து விடுகின்றார்.

இன்னொரு பக்கம், ரோகினியை பார்க்க சென்ற சிந்தாமணி, அண்ணாமலைக்கு ஆக்சிடென்ட் ஆன விஷயத்தையும் அதைத்தான் ஆள் வைத்து செய்ததாகவும் கூறுகின்றார். மேலும், இப்படி செய்தால் தான் மீனா வீட்டை விட்டு வெளியேறுவார், நீ அந்த வீட்டுக்குள் போகலாம் என்று சொல்லுகின்றார்.


இதைத்தொடர்ந்து அண்ணாமலை கண் விழித்துப் பார்த்ததும், விஜயா, முத்து என எல்லோரும் அழுது புலம்புகின்றார்கள். ஆனாலும் மனோ, இதற்கெல்லாம் காரணம் மீனாதான், அந்த ஜோசியக்காரி சொன்னது நடந்துவிட்டது. அதனால் மீனாவை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று சொல்லுகின்றார்.

இறுதியில், மீனா யாருக்கும் சொல்லாமல் தன்னுடைய அம்மா வீட்டுக்கு வந்து விடுகின்றார். அங்கு நடந்தவற்றை சொல்லி அழுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement